கணேஷ் வெங்கட்ராமன் | |
---|---|
![]() 2015 | |
பிறப்பு | கணேஷ் வெங்கட்ராமன் 20 மார்ச்சு 1980 மும்பை, இந்தியா |
பணி | மாடல், திரைப்பட நடிகர் |
உயரம் | 6 அடி 1 அங்குலம் |
வாழ்க்கைத் துணை | நிஷா கிருஷ்ணன் |
கணேஷ் வெங்கட்ராமன் இவர் ஒரு மாடல் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அபியும் நானும் மற்றும் உன்னைப்போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் கமலஹாசன், அமிதாப் பச்சன், மோகன்லால், போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். இவருக்கும் நிஷா கிருஷ்ணன் என்ற நடிகையுடன் 22 நவம்பர் 2015 அன்று திருமணம் நடைபெற்றது.[1][2][3]
கணேஷ் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். அதே ஆண்டில் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற சூப்பர் மாடல் போட்டியில் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.
இவருடைய கல்லூரி நாட்களில், இவருக்கு வடிவழகு மற்றும் நடிப்பு நோக்கி கவனம் இருந்தது. தனது கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார். முறையான கல்வியை முடித்த பின்னர், மென்பொருள் வல்லுநராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இவர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்தார். இயக்குநர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷ் வெங்கட்ராமனை தேர்வு செய்தார்.
இவர் இதுவரைக்கும் 200 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயாவி 3டி தொடர் முலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். உலகில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட 3டி தொடர் இதுவாகும்.
ஆண்டு | படம் | பங்கு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2006 | தி அஞ்ச்ஸ் | Rochak | ஹைதராபாத் உருது | |
2008 | அபியும் நானும் | ஜோகிந்தர் சிங் | தமிழ் | |
2009 | உன்னைப்போல் ஒருவன் | அரிப் கான் | தமிழ் | |
ஈநாடு | தெலுங்கு | |||
2010 | காந்தகார் | சூர்யா நாத் சர்மா | மலையாளம் | |
2011 | கோ | அவராகவே | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2012 | பனித்துளி | சிவா | தமிழ் | |
தமருகம் | ராகுல் | தெலுங்கு | ||
2013 | தீயா வேலை செய்யனும் குமாரு | ஜார்ஜ் | தமிழ் | |
சம்திங் சம்திங் | தெலுங்கு | |||
சந்திரா | ஆர்யா | கன்னடம் | ||
தமிழ் | ||||
இவன் வேற மாதிரி | அரவிந்தன் ஐபிஎஸ் | தமிழ் | ||
பள்ளிக்கூடம் போகாமலே | தமிழ் | படப்பிடிப்பில் | ||
2014 | தும் ஹோ யாரா | சிவா | ஹிந்தி | |
2015 | கன்ஸ் ஆஃப் பெனாரஸ் | ஹிந்தி | படப்பிடிப்பில் | |
தனி ஒருவன் | சக்தி | தமிழ் | ||
அச்ஹர்ரம் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
2016 | முறியடி | விஜய் | தமிழ் | தாமதம் |