கண்டி (மகநுவர) இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | மத்திய |
நிருவாக மாவட்டங்கள் |
கண்டி |
தேர்தல் தொகுதிகள் |
13 |
வாக்காளர்கள் | 970,456[1] (2010) |
மக்கள்தொகை | 1,396,000[2] (2008) |
பரப்பளவு | 1,940 சதுர கிமீ[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
12 |
உறுப்பினர்கள் | மகிந்தானந்த அலுத்கமகே, ஐமசுகூ திலும் அமுனுகம, ஐமசுகூ சரத் அமுனுகம, ஐமசுகூ ஏ. ஆர். எம். அப்துல் காதர், ஐதேமு எஸ். பி. திசாநாயக்க, ஐமசுகூ ரவூப் ஹக்கீம், ஐதேமு எம். எச். ஏ. ஹலீம், ஐதேமு லக்சுஷ்மன் கிரியெல்ல, ஐதேமு பைசர் முஸ்தபா, ஐமசுகூ கெஹெலிய ரம்புக்வெல, ஐமசுகூ லொகான் ரத்வத்த, ஐமசுகூ எரிக் வீரவர்தன, ஐமசுகூ |
கண்டி தேர்தல் மாவட்டம் (Kandy (Mahanuwara) electoral district) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஓர் அலகாகும். இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுள் இம்மாவட்டம் 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இங்கு 2010 ஆம் ஆண்டில் 970,456 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].