ராஜா கோஜாதா (King Kojata) அல்லது கண்டுபிடிக்கப்படாத இளவரசன் (The Unlooked for Prince) என்பது போலந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சுலாவோனிக் விசித்திரக் கதையாகும். [1] "போலந்து இலக்கியத்தின் மிக முக்கியமான தொகுப்புகளில் ஒன்று" என்று லூயிஸ் லெகர் இதனைக் குறிப்பிடுகிறார்.[2]
ஒரு மன்னனுக்கும் அவனது ராணிக்கும் குழந்தைகள் இல்லை. ஒரு நாள், மன்னன் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தான் அப்போது அவனுக்கு தாகம் எடுக்கிறது. அப்போது ஒரு நீறுடன் கூடிய கோப்பை மிதப்பதைக் காண்கிறான். அவனால் கோப்பையை கைப்பற்ற முயன்றும் பலனில்லை. அது அவனிடமிருந்து விலகி சென்று நேரடியாக கிணற்றில் இறங்குகிறது. மன்னன் தண்ணீர் குடிக்கக் கிணற்றில் இறங்கியபோது, கிணற்றில் இருந்த ஒரு மனிதன் அவனது தாடியைப் பிடித்து இழுத்து, தனக்கு ஏதாவது (அரண்மனையில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள்) கொடுப்பதாக உறுதியளிக்கும் வரை அவனை விடுவிக்கப்போவதில்லை என மிரட்டுகிறான். மன்னன் அதற்கு ஒப்புக்கொண்டு அரண்மனை திரும்புகிறான். இதைப்பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை.
நாடு திரும்பிய மன்னன் தன் மனைவிக்கு ஒரு மகன் இருப்பதைக் காண்கிறான். ஆனால் இளவரசன் வளர்ந்ததும், காட்டில் ஒரு முதியவர் அவன் முன் தோன்றி, அவனது தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கூறுகிறார். இதைபற்றி அரசனிடம் கேட்டதும் அரசன் உண்மையை ஒப்புக்கொள்கிறான். தந்தையின் வாக்கை காப்பாற்ற இளவரசன் காட்டுக்கு கிளம்பினான்.
இளவரசன் வாத்து வடிவத்தில் பெண்கள் நீந்திக் கொண்டிருந்த ஒரு ஏரிக்கு வருகிறான். அங்கு கரையில் இருந்த துணிகள் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்கிறான். பறவைகள் கரைக்கு திரும்ப வந்து, பெண்களாக மாறி, ஒருத்தியின் ஆடையைத் தவிர தங்களுடைய ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். அந்த ஒரு பெண் இளவரசனிடம் தனது ஆடைகளைத் திரும்பக் கொடுக்கும்படி கெஞ்சுகிறாள். மனமிரங்கிய இளவரசன் ஆடையைத் திருப்பித் தருகிறான். நன்றியுள்ளவளான அவள் அவனுடைய தந்தை வாக்களித்த மனிதனின் இளைய மகள்தான் என்று கூறி, அவனுக்கு உதவுவதாக உறுதியளிக்கிறாள். தனது தந்தையிடம் சென்றதும், எந்த பயமும் இல்லாமல், மண்டியிட வேண்டும் என்று அவள் அவனிடம் கூறுகிறாள்.
அவளது தந்தை சிரித்துக்கொண்டே அவனை வரவேற்று தன்னுடனே தங்கவைக்கிறார். காலையில், இளவரசனுக்கு ஒரே நாளில் ஒரு பளிங்கு அரண்மனையைக் கட்டும்படி கட்டளையிடுகிறார். தனது அறைக்குச் சென்ற இளவரசன் அந்தப் பெண்ணிடம் இதைக் கூற அவள் தேனீயாக மாறி, அவனுக்காக , அரண்மனையைக் கடட்டித் தருகிறாள் . அடுத்த நாள், அந்த மனிதன் தனது மூன்று மகள்களில் இளைய மகளை தேர்ந்தெடுக்கும்படி கேட்கிறார். தனது கண் இமையில் பூச்சி இருந்தால் தன்னை அடையாளம் காணலாம் எனக்கூறுகிறாள். இளவரசனும் அவ்வாறே அவளை அடையாளம் காண்கிறான். மூன்றாம் நாள், அந்த மனிதன் இளவரசனிடம் தனக்கு ஒரு காலணியைச் செய்யச் சொன்னான். இளவரசன் செருப்பு தைப்பவன் அல்ல என்பதால், இளைய மகள் தாங்கள் தப்பி ஓட இதுவே தகுந்த தருணம் என்று கூறி தரையில் எச்சிலைத் துப்பி உறைபனியை உருவாக்கிவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிடுகின்றனர். வேலையாட்கள் இளவரசனைத் தேடி வந்தபோது, அவர்கள் அங்கே உறைபனியையே கண்டனர். அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர்கள் செல்லும் விமானமே கண்ணில் பட்டது .
வேலையாட்கள் அவர்களை துரத்தினர். அந்தப் பெண் தன்னை ஒரு நதியாகவும், இளவரசனை பாலமாகவும் மாற்றிவிடுகிறாள். பாலத்தின் மீது காட்டுக்குள் செல்லும் மூன்று சாலைகளையும் அமைக்கிறாள். எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் ஊழியர்கள் திரும்பிச் செல்கின்றனர். அவர்கள் பாலமாகவும் நதியாகவும் இருந்ததாக அவளுடைய தந்தை பணியாட்களிடம் கூறி மீண்டும் தேடுதல் வேட்டைக்கு அனுப்புகிறார். வேலையாட்கள் திரும்பி வரும்போது, அந்த பெண் தன்னையும் இளவரசனையும் பல பாதைகள் கொண்ட அடர்ந்த காடாக மாற்றிக் கொள்கிறாள். வேலையாட்கள் வழி தவறி அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் திரும்பி வந்ததும், அவளுடைய தந்தை அவர்களை தானே துரத்த முடிவு செய்தார். தன்னுடைய தந்தை முதல் தேவாலயத்திற்கு மேல் வரமுடியாது என்பதால் அவள் தன்னை ஒரு தேவாலயமாகவும், இளவரசனை ஒரு பாதிரியாராகவும் ஆக்கிக் கொள்கிறாள். தேடிவந்த அவளது தந்தை பாதிரியார் வேடத்தில் இருப்பது இளவரசன் என்பதை அறியாமல் அவர்களைப் பற்றி வினவுகிறார். இளவரசனான பாதிரியார் அவர்கள் கடந்து சென்று விட்டதாகவும், வாழ்த்துக்களை கூறிச் சென்றதாகவும் கூறிகிறான். அதனால் அவளுடைய தந்தை திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
அமெரிக்க எழுத்தாளரும் நாட்டுப்புறவியலாளருமான ராபர்ட் டி. சான் சூசி இந்த கதையை அவரது புத்தகமான தி ஜார்ஸ் ப்ராமிஸ்: எ ரஷியன் டேல் என்ற புத்தகமாக மாற்றினார். இதில் கிங் கோஜாதா என்பது தனது மகனுக்கு எதிரிக்கு வாக்குறுதி அளிக்கும் மன்னரின் பெயராகும். [3]