இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கதிரியக்கக் கழிவுகளைக் களைதல்(Disposal of radioactive waste ) என்பது மருத்துவமனைகளிலும் ஆய்வுக் கூடங்களிலும் தொழில்துறையிலும் ,பயன்பாட்டிற்குப் பின் எஞ்சி இருக்கும் கதிரியக்கப் பொருட்களைக் கவனமாக அகற்றுவதைக் குறிக்கும். மேலும் அணு உலைகளில் எரிபொருள் கோல்களில் நிறைந்த அளவில் கதிரியக்கமுள்ள கழிவுகள் மிஞ்சுகின்றன. இவைகளை எவ்வாறு கையாளுவது? கோட்பாட்டளவில் மூன்று வழிகளுள்ளன.[1][2][3]
1 காலம் தாழ்த்தி கதிரியக்கத்தினை சிதைத்தல் (Delay and allow to Decay ) 2 நீர்த்துப் போகச் செய்து பின் ஆறு குளங்களில் கலந்து விடுதல்.(Dilute and Disperse ) 3 செறிவினை அதிகரித்து பின் காப்பாக வைத்தல் (Concentrate and Contain ) அதிகம் கதிரியக்கம் இல்லாத போது, கதிரியக்கம் தானாகவே அழிந்து காப்பான அளவு வந்ததும், யாருக்கும் தீங்கு நேராமல் ஆற்றிலோ வளிம நிலையிலிருந்தால் உயரமான புகைப் போக்கியின் துணையுடனோ அகற்றலாம். நீருடன் கலந்து அடர்வினைக் குறைத்து, பின் ஆற்றில் கலப்பதும் ஒரு முறையாகும். அடர்வு கூடிய நிலையில், நீர்மநிலைக் கழிவுகளை கொதிநிலைக்கு சூடாக்கி அடர்வினைக் அதிகரித்து வலுவான கலங்களில் சேகரித்து பூமிக்கடியில் மிக ஆழத்தில் புதைத்து விடலாம்.