கத்திவால் அழகி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
இனம்: | P. nomius
|
இருசொற் பெயரீடு | |
Graphium nomius ( Esper, 1793) |
கத்திவால் அழகி (Graphium nomius) என்பது அழகிகள் குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சி ஆகும். இது தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படுகிறது. இவை கூட்டமாக சேற்றில் நீர் உறிஞ்சுவதும் காட்டில் மரத்தைச்சுற்றி வருவதும் கண்ணைக்கவரும் காட்சியாகும்.
தென்னிந்தியா, கிழக்கிந்தியா, சிக்கிம், அசாம், இலங்கை, நேப்பாளம், வங்க தேசம், மியான்மர், தாய்லாந்து, வியட்னாம், இலாவோசு, கம்பூச்சியா ஆகிய பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
இப்பட்டாம்பூச்சியின் மேற்புறமிருக்கும் கறுப்புப் பட்டைகளின் அகலமே தனது நெருங்கிய இனமான ஐம்பட்டை கத்திவால் அழகியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பின்னிறக்கையில் கீழ்ப்புறம் தெரியும் கறுப்புக்குறிகள் மேற்பகுதியிலுள்ளவை ஊடுருவுவதால் மட்டுமின்றி கறுப்புச்செதில்கள் இருப்பதாலும்கூட.[1]
இப்பூச்சின் அகலம் 94–100 மிமீ இருக்கும்.
ஆண்பூச்சியிலும் பெண்பூச்சியிலும் மேற்பகுதி நீலங்கலந்த வெள்ளை நிறைத்தில் இருக்கும். முன்னிறக்கையில் ஐந்து பட்டைகள் இருக்கும். பின்னிறக்கை மண்ணிறமாக இருக்கும். கீழ்ப்புறம் வெள்ளையாக இருக்கும். அதன்மேல் பழுப்புநிறக்கோடுகள் இருக்கும். உணர்வுக்கொம்புகள் கறுப்பாகவும் வயிற்றுப்பகுதி பாலாடை நிறத்திலும் இருக்கும். வயிற்றின் கீழ்ப்புறம் நீண்ட அகலமானதொரு கோடும், பக்கப்புறங்களில் கறுப்புக்கோடுகளும் இருக்கும்.[1]
இறக்கை அகலம் 68–95 மிமீ இருக்கும்.
குறிப்பிட்ட இடங்களில் போதிய எண்ணிக்கையில் தென்படக்கூடியது. அழிவாய்ப்பு எதுவும் அறியப்படவில்லை.[2]
பொதுவாக இலையுதிர் காடுகளில் புதர்களிலும் தாழ்வான மரங்களிலும் காணப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 3000 அடி உயரம்வரை நல்ல எண்ணிக்கையிலும் அதற்குமேல் அவ்வப்போதும் காணலாம். இவை குன்றுகள், காடுகள் ஆகியவற்றுக்கருகேயுள்ள ஊர்களிலும் தென்படுகின்றன.
மனிதர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் விலகியிருக்கும். சிறு அச்சுறுத்தலின்போதும் தப்பித்து விரைந்து பறக்கும். மலர்நிரம்பிய மரங்களைச் சுற்றி கூட்டம் கூட்டமாகத் திரியும். குமில் மழங்களை விரும்பும். வெயில் காலங்களில் மொத்தமாக ஈரிப்பான இடங்களில் குவியும். தரைக்கருகே வெயில்காயும். அந்நேரம் இறக்கைகளை சிறிதோ முழுவதுமோ பரிப்பி நிற்கும். இங்கைக்கு வலசை போகும்.
வளர்ந்த வண்ணத்துப்பூச்சிகளை பிப்பிரவரி முதல் சூன் வரை காணலாம். மார்ச்சு ஏப்பிரல் மாதங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். இந்தியாவின் மேற்குப்பகுதிகளில் சூலையிலிருந்து சில மாதங்கள் இவை பதிவாகியுள்ளன. குறிப்பாக நீலமலையில் அக்டோபர்வரை தென்படுகின்றன.
இப்பட்டாம்பூச்சியின் முட்டைகள் உருண்டையாக, மஞ்சள்நிறத்தில் சிறிது பளபளவென இருக்கும். அவை ஒற்றையாக இலையின் மேற்புறத்திலோ குருத்திலைகளின் அடிப்பகுதிகளிலும் மொட்டுக்களின் அடிப்பகுதியிலும் இடப்படும்.
கருப்பு நிறத்தில் அடிப்புறம் பச்சையாக இருக்கும். குறுக்காக கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலைப்புறமும் பின்புறமும் மஞ்சளாக இருக்கும். தொண்டைக்கட்டிலும் புட்டப்பகுதியிலும் முள்போன்று இருக்கும். நெஞ்சுப்பகுதி பளபளப்பான பச்சைநிறத்தில் இருக்கும். மாலையிலும் இரவிலும் தின்னும் மந்தமான கம்பளிப்புழுவாகும்.[1]
இப்பேரினத்துக்கு உரித்தான கொம்புபோன்ற அமைப்பு கூட்டுப்புழுவுக்கு இருக்கும். தலைப்பகுதியில் சிறு நூட்டங்கள் இருக்கும். மண்பழுப்பு நிறத்தில் இருக்கும். கம்பளிப்புழுவின் உணவுச்செடியிலல்லாது இடுக்குகளிலும் பாறைகளுக்கடியிலும் வாலினால் ஒட்டிக்கொண்டிருக்கும்.[1]
கம்பளிப்புழுக்கள் இரும்புலி (Polyalthia cerasoides), நெட்டிலிங்கம் (Polyalthia longifolia), கொத்துகளா (Miliusa velutina) முதலிய செடிகளின் இலைகளை உண்ணும். இவைதவிர சில இலையுதிர் மரங்களும் உணவாகும். ஒரு தலைமுறையின் கூட்டுப்புழுக்கள் சரியான நேரத்தில் வெளிவந்து இணைதேடி இலையுதிர் மரங்கள் துளிர்விடும் காலத்தில் முட்டையிடுகின்றன.
இப்பட்டாம்பூச்சிகள் இலங்கை கிழக்கு மாகாணத்தின் பட்டாம்பூச்சி என சூற்றடல், புத்தாக்க சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.[3]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]