கந்த குப்தா | |
---|---|
கல்வி கற்ற இடங்கள் | அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் |
விருதுகள் | கிரீகர்-நெல்சன் விருது |
சந்தர் கந்த குப்தா (Chander Kanta Gupta) (8 அக்டோபர் 1938 – 27 மார்ச் 2016)[1][2] கனடாவின் மனிடோபா பல்கலைக் கழகத்தின் கணிதப் பேராசிரியராவாா். இயற்கணிதம் மற்றும் குலங்கள் ஆகிய கணிதப் பிாிவுகளில் இவரது ஆராய்ச்சி பாராட்டத்தக்கது.[3] இவரது ஆராய்ச்சியின் பெரும்பகுதி, பல்வேறு வகையான குழுக்களில் ஆட்டோமார்பிசம் பற்றியதாகும்.[4]
குப்தா, ஜம்மு மற்றும் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றாா். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றாா். மேலும் 1967இல் மைக்கேல் ஃப்ரெட்ரிக் நியூமன் என்பவாின் மேற்பார்வையில் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றாா்.[5][6] இவர் 1991 இல் கனடாவின் அரச கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் கனடிய கணிதவியல் சங்கத்தின் கிரீகர்-நெல்சன் பரிசு வழங்கப்பட்டது.[5]
இவரது கணவர், நரேன் குப்தாவும் (1936-2008) ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், மற்றும் புகழ் பெற்ற மனிடோபா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியர் ஆவாா்.[7]