![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
627-52-1 | |
ChemSpider | 120218 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 136447 |
| |
பண்புகள் | |
C2N2S | |
வாய்ப்பாட்டு எடை | 84.10 g·mol−1 |
தோற்றம் | வெண்மை திண்மம் |
அடர்த்தி | 1.48 கி/செ.மீ3 |
உருகுநிலை | 63.5 °C (146.3 °F; 336.6 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கந்தக இருசயனைடு (Sulfur dicyanide) S(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுவதாகக் கருதப்படும் இந்த எளிய சேர்மம் முக்கியமாக கோட்பாட்டு அளவில் அடிப்படை ஆர்வத்தை கொண்டுள்ளது. இது இருசயனோசல்பேன்களின் (Sx(CN)2) முதல் உறுப்பினர் ஆகும். தையோசயனோசன்களும் ((SCN)2) , S4(CN)2 வரையிலான உயர்பாலிசல்பேன்களும் இதில் உள்ளடங்கும்.[1] எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகளின்படி இம்மூலக்கூறு சமதளமானதாகும். SCN அலகுகள் நேர்கோட்டில் உள்ளன. S-C-S அணுக்களின் பிணைப்புக் கோணம் 95.6° ஆக உள்ளது.[2] உலோக சயனைடுகள் மற்றும் கந்தக ஆலைடுகளின் வினைகள் பற்றிய ஆய்வு மூலம் S(CN)2 இன் தயாரிப்பு சோடர்பேக்கிற்கு சேர்கிறது.[3]