கந்தோலி இராச்சியம் Kantoli Kingdom Kerajaan Kandali Kan - To - Li | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 454–கிபி 700 | |||||||||
தலைநகரம் | கோலா துங்கல் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிபி 454 | ||||||||
• முடிவு | கிபி 700 | ||||||||
|
இந்தோனேசிய வரலாறு |
---|
காலவரிசை |
கந்தோலி இராச்சியம் (ஆங்கிலம்: Kantoli; Kantoli Kingdom; மலாய்: Kantoli; இந்தோனேசிய மொழி: Kerajaan Kandali) என்பது கிபி 5-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, தெற்கு சுமாத்திராவில் ஜம்பிக்கும் பாலெம்பாங்கிற்கும் இடையில் அமைந்து இருந்ததாகக் கருதப்படும் ஒரு பண்டைய இந்திய மய இராச்சியமாகும்.[1][2]
இந்த அரசமைப்புக்கு சமசுகிருத மொழியில் குந்தாலா (Kuntala) என்று பெயர்.[3] சீன வரலாற்றுப் பதிவுகள், சன்போட்சி (Sanfotsi) எனும் அரசு முன்பு கந்தோலி (Kantoli) என அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன.[4]
மேலும் கந்தோலி இராச்சியத்தின் அமைவிடமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவே வரலாற்று ஆசிரியர்களுக்கு, கந்தோலியை சிறீ விஜய பேரரசின் முன்னோடியாகக் கருத வழிவகுத்தது.[5]
சீன வரலாற்றுப் பதிவுகள், சிறீ விஜய பேரரசை சன்போட்சி என்று குறிப்பிடுகின்றன.[1]
தென் சீனாவில் லியூ சோங் வம்சாவளி ஆட்சியின் போது, கந்தோலி இராச்சியம் தன்னுடைய தூதர்கள் பலரைச் சீனாவிற்கு அனுப்பியது. இரு இராச்சியங்களுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை கந்தோலிக்கு பெரும் செல்வத்தை வழங்கின. அந்த வகையில் கந்தோலி இராச்சியம், சீனாவைப் பெரிதும் நம்பி இருந்தது.[1]
தென் சீனாவை சுயி அரச மரபினர் கைப்பற்றியதன் மூலம், புதிய ஆட்சியாளரின் சிக்கன நடவடிக்கையால் கந்தோலி இராச்சியத்தின் வணிகம் பெரிதளவு குறைந்தது.
454-ஆம் ஆண்டு; மற்றும் 464-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கந்தோலி இராச்சியத்தின் அரசர் செரி வாரணரேந்திரா (Sri Varanarendra), இந்து ருத்ரா (Hindu Rudra) எனும் அன்பளிப்பை சீனாவிற்கு தம் தூதர்கள் மூலமாக அனுப்பினார்.
பின்னர் அவருடைய மகன் விஜயவர்மன் (Vijayavarman) என்பவரும் 519-இல் அன்பளிப்புகளைச் செய்துள்ளார்.[6]:55
7-ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியம் வரலாற்றில் இருந்து மறைந்து போனது. ஒருவேளை, சுமாத்திராவின் கிழக்கு கடற்கரையில் ஜம்பி சுல்தானகம் மற்றும் சிறீவிஜயம் (பலெம்பாங்) ஆகிய இரண்டு பேரரசுகள் தோன்றியதன் காரணமாக இருக்கலாம்.[7]