பெத்ரோ கனகராய முதலியார் | |
---|---|
துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார் | |
கனகராய முதலியாரின் சிற்பம், புனித ஆண்ட்ரூஸ் திருச்சபை, புதுச்சேரி | |
தாய்மொழியில் பெயர் | துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார் |
பிறப்பு | 1696 புதுச்சேரி |
இறப்பு | புதுச்சேரி | 12 பெப்ரவரி 1746 (வயது 50)
மற்ற பெயர்கள் | கனகராய முதலி |
பணி | தலைமை துபாஷி[1] மற்றும் வணிகத் தரகர் |
செயற்பாட்டுக் காலம் | 1722–1746 |
பணியகம் | பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி |
அறியப்படுவது | கட்டிடத் தெரு, புனித ஆண்ட்ரூஸ் திருச்சபை, ரெட்டியார்பாளையம், புதுச்சேரி |
பட்டம் | புதுச்சேரி பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமை மொழிபெயர்ப்பாளர் |
முன்னிருந்தவர் | குருவப் பிள்ளை[2] |
பின்வந்தவர் | ஆனந்தரங்கம் பிள்ளை |
வாழ்க்கைத் துணை | நட்சத்திரம் |
பிள்ளைகள் | 1 |
பெத்ரோ கனகராய முதலியார் (Pedro Kanakaraya Mudaliar), புதுச்சேரி பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமை மொழிபெயர்ப்பாளரும் மற்றும் பெருவணிகத் தரகரும் ஆவர். இவர் 1722 முதல் 1746 முடிய 24 ஆண்டுகள், குறிப்பாக ஆளுநர் யோசப் பிரான்சுவா தூப்ளே காலத்தில் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் தமிழர்களுக்கு இடையே மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். இவருக்குப் பின் இவரது பணியை ஆனந்தரங்கம் பிள்ளை செய்தார். கனகராய முதலியாரின் பணிகள் குறித்து ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குறித்துள்ளார். அதில் கனகராய முதலியார் இறந்த தனது மகனின் நினைவாக புதுச்சேரியில் புனித ஆண்ட்ரூஸ் திருச்சபையை எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிரஞ்ச் ஆளுநர் மற்றும் அதிகாரிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து கொண்டே வணிக இடைத்தரகர் பணி, ஆடைகள் உற்பத்தி மற்றும் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றை மேற்பார்வையிட்டார்.
தனது தொழிலுக்கு உதவியாக இருந்த கனகராய முதலியாரின் ஒரே மகன் வேலவேந்திர முதலி (பிறப்பு:12 செப்டம்பர் 1718) 22 அக்டோபர் 1739 அன்று 21வது அகவையில் காலமானார்.[3]