கனகலதா முகுந்த் என்பவர் இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். தென்னிந்திய வணிகர்களின் வரலாறு, பழந்தமிழ் வணிகம், ஆங்கிலேய வணிகர்களின் வணிகமுறைகள், ஆதிக்க நிலை மற்றும் பெண்களுடைய உரிமைகள், செயல்கள் போன்றவற்றை தமது ஆய்வு நூல்களில் எழுதியுள்ளார்.
கனகலதா முகுந்தின் தந்தை சி. வி. நரசிம்மன்.அவர் ஐக்கிய நாட்டு சபையில் உதவிப் பொதுச்செயலாளராக இருந்தவர். கனகலதா நியுயார்க்கு பர்னர்ட் கல்லூரியில் 1962 ஆம் ஆண்டில் படித்தார். 1964 இல் ஜகந்நாதன் முகுந்த் என்பரை மணந்தார். கனகலதா முகுந்த் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றவர். மும்பைப் பல்கலைக்கழகம், போபால் பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத்தில் பொருளியல் சமூக கல்வி நடுவத்தில் பணி புரிந்தார்.[1]
தமிழக வணிகர்கள் பற்றியும் அவர்கள் வணிகம் செய்யும் முறைகள் பற்றியும் ஆங்கிலேய வணிகர்களுடன் தமிழ் வணிகர்கள் பழகிய விதம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இந்திய வணிகர்கள் சாதியால் வேறுபட்டு போட்டியிட்டனர் என்றும் அந்தப் போட்டிகள் வன்முறையாக மாறியது எனவும் தமது நூலில் எழுதினார்.[2] தொடக்கக் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க முயன்று இறுதியில் இந்திய வணிகர்கள் தோல்வியைக் கண்டனர். அதனால் 1725 வாக்கில் தென்னிந்திய நெசவுத் தொழில் நசியத் தொடங்கியது என்று தம் ஆய்வு நூல்களில் எழுதியுள்ளார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)