Commission de vérité et réconciliation du Canada | |
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூன் 2, 2008 |
கலைப்பு | திசம்பர் 18, 2015 |
பின்வந்த அமைப்பு |
|
வகை | உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் சமூக நல்லிணக்க ஆணையம் |
ஆட்சி எல்லை | கனடா அரசு |
தலைமையகம் | வினிப்பெக், மானிட்டோபா மாகாணம், கனடா |
அமைப்பு தலைமை |
|
முக்கிய ஆவணம் |
|
வலைத்தளம் | www |
கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission of Canada (TRC); கனடா உறைவிடப் பள்ளிகளில் கனடாவின் முதல் குடிமக்களின் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றத் துன்புறுத்தல்களின் உண்மைகளை வெளிக்கொணரும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் மானிட்டோபா மாகாணத்தின் வினிப்பெக் நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் கனடாவின் முதல் குடிமக்களின் குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளிகளில் நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள், துன்புறுத்துதல்கள், கானாமல் போன குழந்தைகள் மற்றும் இறந்த குழந்தைகள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு கனடியப் பழங்குடிகளுடன் நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.[1][2]
கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைப்படி, கனடா அரசு பழங்குடியின மக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தப்படி உறைவிடப் பள்ளிகளின் செயல்பாடுகள் 1960 ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை கனடாவில் படிப்படியாக நிறுத்தப்பட்டது.
கன்டா நாட்டின் பூர்வ குடிகளான கனடியப் பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, ஆங்கிலிக்கம் மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தது.[3] இப்பள்ளிகளின் கட்டுப்பாட்டுகளுக்கு இணங்காத குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினர். பள்ளி நிர்வாகம் தங்கள் வழிக்கு வரும் வரை குழந்தைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்காது கொடுமைப் படுத்தினர். இக்கொடுமைகளால் பல குழந்தைகள் பசியினாலும், நோயுற்றும் இறந்து போயினர். மேலும் குழந்தைகளை பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதி வழங்குவதும் இல்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான இந்த உறைவிடப் பள்ளிகள் கனடா அரசின் நிதி உதவியுடன் கத்தோலிக்கம் போன்ற கிறித்துவத் திருச்சபைகளால் 1876-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.[4]
இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்து விடுகின்றனர். மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர்.[5] உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.:669–674[6]}}[7][8]:42 ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகள் தங்கிப் படித்தனர்.:2–3 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர்.[9] போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடா பூர்வ குடிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து.[10][11]
பின்னர் பழங்குடியின மக்களின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)