கனல் கண்ணன் | |
---|---|
பிறப்பு | வி. கண்ணன் 12 பெப்ரவரி 1962 நாகர்கோயில், தமிழ்நாடு, இந்தியா |
பணி | இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளர், சண்டைப் பயிற்சியாளர், சண்டை ஒருங்கிணைப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991-2017 வரை |
கனல் கண்ணன் (பிறப்பு:12 பெப்ரவரி 1962) வி. கண்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர். இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.[1] பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் இவருடைய மாணவர்களாவார்.[2]
சென்னை மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பயண நிறைவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து முன்னணியின் மாநில கலை இலக்கியச் செயலாளர் கனல் கண்ணன், ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்ன ஈ. வெ. ராவின் சிலை இருப்பதாகவும், அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.[3][4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)