கனோவிட் (P210) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Kanowit (P210) Federal Constituency in Sarawak | |
கனோவிட் மக்களவைத் தொகுதி (P210 Kanowit) | |
மாவட்டம் | கனோவிட் மாவட்டம் |
வட்டாரம் | சிபு பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 30,988 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கனோவிட் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சரிக்கே |
பரப்பளவு | 2,187 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ஆரோன் அகோ டகாங் (Aaron Ago Dagang) |
மக்கள் தொகை | 24,700 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கனோவிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kanowit; ஆங்கிலம்: Kanowit Federal Constituency; சீனம்: 加诺威联邦选区) என்பது மலேசியா, சரவாக், சிபு பிரிவின் கனோவிட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P210) ஆகும்.[5]
கனோவிட் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கனோவிட் மாவட்டம் (Kanowit District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கனோவிட் நகரம்.[7][8] இந்த மாவட்டத்தின் முக்கிய இனக்குழுக்கள்: இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் பூர்வீக மக்கள்.
வரலாற்றுப் பதிவுகளின்படி, 1851-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மாவட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. 1851-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். அதன் பெயர் எம்மா கோட்டை. அப்போது கனோவிட் நிலப்பகுதி, புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1853-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆற்றின் நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கட்டப்பட்ட எம்மா கோட்டை, ராஜாங் ஆற்றைப் பயன்படுத்திய மக்களுக்கு டயாக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தது.
கனோவிட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2024) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கனோவிட் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11] | |||
3-ஆவது மக்களவை | P138 | 1971-1974 | ஜோசப் உந்திங் உமாங் (Joseph Unting Umang) |
சுயேச்சை |
4-ஆவது மக்களவை | P148 | 1974-1976 | லியோ மோகி (Leo Moggie Irok) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
1976-1978 | பாரிசான் நேசனல் (BN) (சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS) | |||
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P171 | 1986-1990 | ||
8-ஆவது மக்களவை | P170 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P182 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P183 | 1999-2004 | பாரிசான் நேசனல் (BN) (சரவாக் மக்கள் கட்சி) (PRS) | |
11-ஆவது மக்களவை | P209 | 2004-2008 | ஆரோன் அகோ டகாங் (Aaron Ago Dagang) | |
12-ஆவது மக்களவை | P210 | 2008-2013 | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (சரவாக் மக்கள் கட்சி) (PRS) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஆரோன் அகோ டகாங் (Aaron Ago Dagang) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 7,411 | 41.07 | 41.07 | |
முகமட் பவுசி அப்துல்லா (Mohd Fauzi Abdullah) | பாக்காத்தான் (PH) | 7,175 | 39.77 | 4.35 | |
மைக்கெல் லியாஸ் (Michael Lias) | சுயேச்சை (Independent) | 2,289 | 12.69 | 12.69 | |
ஜார்ஜ் சென் நுக் ஃபா (George Chen Nguk Fa) | சுயேச்சை (Independent) | 741 | 4.11 | 4.11 | |
எல்லி லுகாத் (Elli Luhat) | சுயேச்சை (Independent) | 427 | 2.37 | 2.37 | |
மொத்தம் | 18,043 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 18,043 | 98.01 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 367 | 1.99 | |||
மொத்த வாக்குகள் | 18,410 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 30,988 | 18410 | 13.83 ▼ | ||
Majority | 236 | 1.3 | 27.85 ▼ | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [12] |