கன்சிராம் | |
---|---|
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் | |
பதவியில் 1984–1995 | |
பின்னவர் | மாயாவதி குமாரி |
இந்தியன் நாடாளுமன்றம் ஹோஷியார்பூர் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | கமல் சவுத்திரி |
பின்னவர் | கமல் சவுத்திரி |
இந்தியன் நாடாளுமன்றம் இட்டாவா | |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | ராம்சிங் சாக்கியா |
பின்னவர் | ராம்சிங் சாக்கியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 மார்ச் 1934 பஞ்சாப்[1] |
இறப்பு | 9 அக்டோபர் 2006 புது தில்லி |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
சமயம் | பௌத்தம் |
இணையத்தளம் | Official Site |
கன்சிராம் (Kanshi Ram) (15 மார்ச் 1934 – 9 அக்டோபர் 2006) இந்திய அரசியல்வாதியாகவும், சமூகச் சீர்திருத்தவாதியுமாக இருந்தவர். தலித் மக்களின் மேம்பாட்டிற்காக, அரசியல் ரீதியாகத் தலித்துகளை ஓன்று திரட்டப் பாடுபட்டவர். கன்சிராம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 1984 ஆம் ஆண்டு, அம்பேத்கர் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கட்சியான பகுசன் சமாச் கட்சியினைத் துவங்கினார். இவருடைய வழிவந்த மாயாவதி நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்சிராம், தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.
கன்சிராம் அம்பேத்கரின் ஐம்பதாவது நினைவு நாளான அக்டோபர் 14 ஆம் நாளன்று சமயத்தைத் தழுவ இருந்தார் ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அக்டோபர் 9 அன்று இறந்தார்.[2] ஆனால் அவரின் இறுதிச் சடங்குகள் பௌத்த சமயத்தின் படி நடந்தன.