கன்னட இலக்கிய மாநாடு ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ | |
---|---|
வகை | கன்னட இலக்கியம் |
காலப்பகுதி | ஆண்டுக்கு ஒரு முறை |
அமைவிடம்(கள்) | வெவ்வேறு இடங்கள் |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 109 |
துவக்கம் | 1915 |
மிக அண்மைய | 2012 |
புரவலர்கள் | கருநாடக அரசு |
வலைத்தளம் | |
கன்னட இலக்கிய மாநாடு |
கன்னட இலக்கிய மாநாடு (கன்னடம்: ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಸಮ್ಮೇಳನ; கன்னட சாகித்திய சம்மேளனம்) கன்னட மொழி எழுத்தாளர்களும், கவிஞர்களும் பங்கேற்கும் இலக்கிய மாநாடு ஆகும். கன்னட மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, இசை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு, ஹெ. வே. நஞ்சுண்டைய்யாவின் உந்துதலால் 1915 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்றது.[1] 1915 முதல் 1948 வரை இம்மாநாடுகளை கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் தொடங்கி வைத்தனர். அதற்குப் பின்னர், கருநாடக முதல்வராக இருப்பவர் விழாவைத் தொடங்கி வைப்பது வழக்கமாக மாறியது