کننگہام گھنٹہ گھر | |
ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியாமகாராணியின் வைர விழாவின் நினைவாக 1900இல் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் | |
ஆள்கூறுகள் | |
---|---|
இடம் | பெசாவர், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
வகை | மணிக்கூட்டுக் கோபுரம் |
முடிவுற்ற நாள் | 1900 |
கன்னிங்காம் மணிக்கூட்டுக் கோபுரம் (Cunningham Clock Tower) பாக்கித்தானின், கைபர்-பக்துன்வா மாகாணத்தின், பெசாவரில் 1900-ல் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும்.[1] ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணியின் வைர விழாவின் நினைவாக இந்த கோபுரத்திற்கு முன்னாள் பிரித்தானிய ஆளுநரும், மாகாணத்தின் அரசியல் முகவருமான சர் ஜார்ஜ் கன்னிங்காம் [2] நினைவாக பெயரிடப்பட்டது
பெசாவர் நகராட்சிப் பொறியாளரான ஜேம்ஸ் ஸ்ட்ராச்சனால் வடிவமைக்கப்பட்டது. 1898இல் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் ஆளுநர் ஜார்ஜ் கன்னிங்காம் (இப்போது கைபர் பக்துன்வா) அடிக்கல் நாட்டினார். விக்டோரியா மகாராணியின் வைர விழாவை நினைவுகூரும் வகையில் இது 1900இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
கோபுரம் 31 அடி விட்டம் கொண்டது. இதன் அடிப்பகுதி 13 / 4 மீட்டரும் (43 அடி × 13 அடி), 26 மீட்டர் (85 அடி) உயரத்தில் கண்டா கர் சௌக் ("மணிக்கூட்டுக் கோபுரச் சதுக்கம்") என உள்ளது.