கமலா தாஸ் குப்தா(Kamala Das Gupta) ஓர் இந்திய சுதந்திர போராளி ஆவார். 11, மார்ச் 1907 அன்று டாக்காலில் பிக்ராம்பூரைச் சேர்ந்த ஒரு பத்ரலோக் வைத்யா குடும்பத்தில் பிறந்தார்.டாக்கா என்பது தற்போது வங்காளதேசம் என்று அழைக்கப்படுகிறது.பிறகு இவர்களுடைய குடும்பம் கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார்கள்.அங்கு பெத்தூன் கல்லூரி,[1] கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இவர் வரலாற்று துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சந்தித்த இளைஞர்களிடையே தேசியவாத கருத்துக்கள் இருந்தன, பின்னர் இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை மனதில் நிரப்பிக் கொண்டார். இவர் தனது படிப்பை விட்டுவிட்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நுழைய முயன்றார், ஆனால் இவரது பெற்றோர் அதை ஏற்கவில்லை. தனது கல்வியை முடித்த இவர், தீவிரவாத ஜுகந்தர் கட்சியின் சில உறுப்பினர்களுடன் நட்பு கொண்டார்.இவர் காந்தியத்திலிருந்து ஆயுத எதிர்ப்புக்கு மாறினார்.[2]
1930 ஆம் ஆண்டில் இவர் வீட்டை விட்டு வெளியேறி ஏழை பெண்களுக்கான விடுதி மேலாளராக ஒரு வேலையைப் செய்தார். புரட்சியாளர்களுக்கான குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை அங்கே சேமித்து வைத்தார்.[3] குண்டுவெடிப்பு தொடர்பாக கமலா தாஸ் பல முறை கைது செய்யப்பட்டார், ஆனால் ஒவ்வொரு முறையும் ஆதாரங்கள் கிடைக்காததால் விடுவிக்கப்பட்டார். பிப்ரவரி 1922 இல் ஆளுநர் ஸ்டான்லி ஜாக்சனை சுட முயற்சித்த பினா தாஸுக்கு [4] துப்பாக்கியை வழங்கியதாக கைது செய்யப்பட்டார்.ஆனால் பின்னர் விடுவிக்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசு இறுதியாக கமலா தாஸ் சிறையில் அடைப்பதில் வெற்றி கண்டது. 1936 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1938 ஆம் ஆண்டில் ஜுகந்தர் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டது, மேலும் கமலாவும் தனது விசுவாசத்தை பெரிய கட்சிக்கு அளித்தார் . அதன்பின்னர் இவர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார், குறிப்பாக 1942 மற்றும் 1943 ஆம் ஆண்டு பர்மிய அகதிகளிடமும், 1946-47ல் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுடனும். 1946 இல் காந்தி பார்வையிட்ட நோகாலியில் உள்ள நிவாரண முகாமுக்கு இவர் பொறுப்பேற்றார்.
காங்கிரஸ் மகிலா ஷில்பா கேந்திரா மற்றும் தக்ஷினேஷ்வர் நாரி ஸ்வபாலம்பி சதான் ஆகியவற்றில் பெண்கள் தொழிற்கல்வி பயிற்சிக்காக பணியாற்றினார். இவர் பல ஆண்டுகளாக அற்புதமான பெண்கள் பத்திரிகையான மந்திரா பத்திரிகையை திருத்தினார்.இவர் ராக்டர் அக்ஷரே (இன் லெட்டர்ஸ் ஆஃப் பிளட், 1954) மற்றும் ஸ்வாதிநாதா சங்ரேம் நரி (சுதந்திர போராட்டத்தில் பெண்கள், 1963) ஆகிய இரண்டு நினைவு குறிப்புகளை பெங்காலி மொழியில் இயற்றியுள்ளார்.19 சூலை 2000 ஆம் ஆண்டு காலமானார்.