தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | கமல்சீத்து கௌர் சாந்து | |||||||||||||
தேசியம் | இந்தியர் | |||||||||||||
பிறப்பு | 20 ஆகத்து 1948 பிரோசுப்பூர், பஞ்சாப், இந்தியா | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 55.6 (1972) | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
கமல்சீத்து சாந்து (Kamaljeet Sandhu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். கமல்சீத்து கவுர் கூனர் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1948 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிந்தியா கன்யா வித்யாலயாவின் முன்னாள் மாணவராக அறியப்படுகிறார்.[2] 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பேங்காக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியப் பெண் வீராங்கனையான இவர் பந்தய தூரத்தை 57.3 வினாடிகளில் கடந்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சிறப்புக்குரியவராகக் கருதப்படுகிறார்.[3] இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 1971 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]
1971 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் டுரினில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற மியூனிக் ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். 1973 ஆம் ஆண்டு தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
தேசிய அளவிலான கூடைப்பந்து மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வளைதடிப் பந்தாட்ட வீரராகவும் இருந்தார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியப் பெண்கள் ஓட்டப்பந்தய அணியின் பயிற்சியாளராகச் சென்றார்.