கம்னா சந்திரா (Kamna Chandra) ஓர் இந்திய திரைப்பட எழுத்தாளர் ஆவார், இவர் அனைத்திந்திய வானொலிக்காக நாடகங்களை எழுதியுள்ளார், சாந்தினி [1], 1942 எ லவ் ஸ்டோரி[2][3] மற்றும் பிரேம் ரோக் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி காஷிஷ்[4] ஆகியவற்றிற்காக கதைகள் மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.
கம்னா முசாபர்நகர் (உ.பி.) பகுதியைச் சேர்ந்தவர், டெஹ்ராடூனில் உள்ள எம்.கே.பி கல்லூரியில் தனது பள்ளிக்கல்வியினை பயின்றார். [5] பின்னர் இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், பின்னர் வணிக நிர்வாகியான நவீன் சந்திராவை மணந்தார் [6]