கம்பம்பதி அரி பாபு | |
---|---|
![]() அலுவல் புகைப்படம், 2021 | |
27வது ஒடிசா ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 சனவரி 2025 | |
ஒடிசா முதலமைச்சர் | மோகன் சரண் மாச்சி |
முன்னையவர் | ரகுபர் தாசு |
15வது மிசோரம் ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 6 நவம்பர் 2021 – 8 சனவரி 2025 | |
முன்னையவர் | பி. டி. மிசுரா (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | விஜய் குமார் சிங் |
பதவியில் 19 சூலை 2021 – 10 ஆகத்து 2021 | |
முன்னையவர் | பி. எஸ். சிறீதரன் பிள்ளை |
பின்னவர் | பா. த. மிசுரா (கூடுதல் பொறுப்பு) |
10வது தலைவர்-பாரதிய ஜனதா கட்சி, ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் 2 சூன் 2014 – 13 மே 2018 | |
முன்னையவர் | ஜி. கிஷன் ரெட்டி |
பின்னவர் | கண்ணா லட்சுமிநாராயணா |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | தகுபதி புரந்தேசுவரி |
பின்னவர் | எம். வி. வி. சத்தியநாராயணா |
தொகுதி | விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர், ஆந்திரா | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | அப்துல் இரகுமான் சேக் |
பின்னவர் | துரோனம்ராஜூ சத்யநாராயணா |
தொகுதி | விசாகப்பட்டினம்-1 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1953 திம்மசமுத்திரம், பிரகாசம் மாவட்டம், சென்னை மாநிலம் (ஆந்திரப் பிரதேசம், தற்பொழுது), இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கம்பம்பதி ஜெயசிறீ |
பெற்றோர் |
|
வாழிடம் | ஆளுநர் மாளிகை, புவனேசுவர் |
முன்னாள் மாணவர் | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
கம்பம்பதி அரி பாபு (Kambhampati Hari Babu)(பிறப்பு 15 சூன் 1953) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது ஒடிசாவின் ஆளுநராகப் பணியாற்றுகிறார்.[1] இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் தனிநபர் மற்றும் மிசோராம் ஆளுநராகப் பணியாற்றிய முதல் தெலுங்கு நபர் ஆவார்.[2] ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2014 இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] இவர் 2014 முதல் 2018 வரை ஆந்திரப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகப் பணியாற்றினார்.
அரி பாபு பிரகாசம் மாவட்டத்தின் திம்மசமுத்திரத்தில் பிறந்தார். இவர் இளநிலை தொழில்நுட்பக் கல்வி கற்க விசாகப்பட்டினத்திற்குச் சென்றார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் மின்னணு தகவல் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். இங்கு இவர் தனது முதுநிலை தொழில்நுட்பம், முனைவர் பட்டங்களை முடித்தார். பின்னர் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக சேர்ந்து 1993ஆம் ஆண்டில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றியபோது தானாக முன்வந்து ஓய்வு பெற்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.[4][5]
ஆந்திர மாநில உருவாக்கத்திற்கு ஆதரவாக ஜெய் ஆந்திரா இயக்கத்தில் பங்கேற்றபோது அரி பாபு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு மாணவர் தலைவராக, தென்னெட்டி விசுவநாதம், கௌத் இலச்சண்ணா, வெங்கையா நாயுடு போன்ற பிற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1972 முதல் 1973 வரை ஆந்திரப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.
1974 முதல் 1975 வரை, அவசரநிலைக்கு எதிராக ஜெயப்பிரகாசு நாராயண் தலைமையிலான லோக் சங்கர்ஷ் சமிதி போராட்டத்தில் அரி பாபு சேர்ந்தார். இவர் உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் மத்தியச் சிறை, முசிராபாத் சிறைகளில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
1977ஆம் ஆண்டில், இவர் ஜனதா கட்சி ஆந்திரப் பிரதேச மாநில செயற்குழுவில் உறுப்பினரானார். 1978ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஜனதா யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1990களின் முற்பகுதியில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், 1991 முதல் 1993 வரை ஆந்திரப் பிரதேச மாநில செயற்குழுவில் உறுப்பினராகவும், 1993 முதல் 2003 வரை மாநில பிரிவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
1999ஆம் ஆண்டில், அரி பாபு விசாகப்பட்டினம்-1 சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2003ஆம் ஆண்டில் ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றக் கட்சியின் தளத் தலைவரானார். மார்ச் 2014இல், இவர் மாநில பிரிவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] 2014 இந்திய பொதுத் தேர்தலில் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி வேட்பாளர் ஒய். எசு. விஜயம்மாவினை 90,488 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2021 சூலை 19 அன்று, அரி பாபு மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2024 திசம்பர் 26 அன்று, அவர் ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆண்டு | அலுவலல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | % | போட்டியாளர் | கட்சி | வாக்குகள் | % | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1999 | சட்டமன்ற உறுப்பினர் | விசாகப்பட்டினம்-I | பாரதிய ஜனதா கட்சி | ![]() |
34,696 | 46.10 | சப்பம் அரி | இந்திய தேசிய காங்கிரசு | 26,285 | 34.93 | வெற்றி | |
2004 | 24,885 | துரோணமராஜு சத்யநாராயணா | 41,652 | தோல்வி | ||||||||
2014 | மக்களவை உறுப்பினர் | விசாகப்பட்டினம் | 566,832 | 48.71 | ஒய். எசு. விஜயம்மா | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ![]() |
476,344 | 40.94 | வெற்றி |
சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியைப் பயன்படுத்துவதற்கு அரி பாபு முன்னுரிமை அளித்தார்.[7] இந்நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பெரிய, நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்த இவர் முற்பட்டார்.[8] குறிப்பிடத்தக்கத் திட்டங்களில் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள், தளபாடங்கள் வழங்குதல், பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் வசதிகள் ஆகியவை அடங்கும்.[9] மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இவர் "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்-ஓர் ஆலோசனை" போட்டியை ஏற்பாடு செய்தார்.[10]