கம்பார் (P070) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Kampar (P070) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கம்பார் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 89,894 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | கம்பார் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கம்பார், மம்பாங் டி அவான், கோலா டிப்பாங், மாலிம் நாவார், தீமோ, கோப்பேங், கோத்தா பாரு, செண்டிரியாங், துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் |
பரப்பளவு | 547 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சோங் செமின் (Chong Zhemin) |
மக்கள் தொகை | 104,552 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கம்பார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kampar; ஆங்கிலம்: Kampar Federal Constituency; சீனம்: 金宝国会议席) என்பது மலேசியா, பேராக், கம்பார் மாவட்டத்தில் (Kampar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P070) ஆகும்.[7]
கம்பார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து கம்பார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கம்பார் நகரம், பேராக், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்பகுதி. மலேசியாவில் மிகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கம்பார் நகரத்தில் சீனர்கள் அதிகமாக வாழ்ந்தாலும் தமிழர்களையும் கணிசமான எண்ணிக்கையில் காண முடியும்.[8]
கம்பார் நகரம் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவு பழைய நகரம் என்றும், இன்னொரு பிரிவு புதிய நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. பழைய நகரத்தில் உலகப் போர்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் கலாசாரப் பாரம்பரியச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கம்பார் நகரம் 1887-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் பழைய பெயர் மம்பாங் டி அவான்.
பண்டார் பாரு கம்பார் எனும் புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு கல்விக் கழகங்கள் உள்ளன. 2009-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கம்பார் நகராண்மைக் கழகம், பேராக் மாநிலத்தின் 10-ஆவது மாவட்டமாக அதிகாரப் பூர்வமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.[9] 1894 மார்ச் 13-இல் மம்பாங் டி அவான் எனும் பெயர் கம்பார் என மாற்றம் கண்டது.
கம்பார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் கிந்தா செலாத்தான் தொகுதியில் இருந்து கம்பார் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P053 | 1959–1960 | லியோங் கீ நியான் (Leong Kee Nyean) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) |
1960–1963 | சான் யூன் ஒன் (Chan Yoon Onn) |
மக்கள் முற்போக்கு கட்சி | ||
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P053 | 1963–1964 | சான் யூன் ஒன் (Chan Yoon Onn) |
மக்கள் முற்போக்கு கட்சி |
2-ஆவது மக்களவை | 1964–1969 | தோ தீம் ஆக் (Toh Theam Hock) |
மலேசிய கூட்டணி (மலேசிய சீனர் சங்கம்) | |
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P053 | 1971–1974 | பான் இயூ தெங் (Fan Yew Teng) |
ஜனநாயக செயல் கட்சி |
பத்து காஜா மக்களவைத் தொகுதியுடன் இணைப்பு | ||||
பத்து காஜா மக்களவைத் தொகுதியில் இருந்து புதிய தொகுதி | ||||
7-ஆவது மக்களவை | P065 | 1986–1990 | நிகோய் தியாம் வோ (Ngoi Thiam Woh) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | ஜேம்ஸ் வோங் விங் (James Wong Wing) |
காகாசான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
9-ஆவது மக்களவை | P068 | 1995–1999 | எவ் சீ தோங் (Hew See Tong) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P070 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | லீ சீ லியோங் (Lee Chee Leong) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | கோ சுங் சென் (Ko Chung Sen) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | சூ கியோங் சியோங் (Su Keong Siong) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சோங் செமின் (Chong Zhemin) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
89,894 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
60,399 | 67.19% | ▼ - 9.96% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
59,386 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
161 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
852 | ||
பெரும்பான்மை (Majority) |
14,330 | 1.65% | + 16.08 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [11] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
சோங் செமின் (Chong Zhemin) |
பாக்காத்தான் | 59,386 | 30,467 | 51.30% | - 6.26% ▼ | |
லீ சீ லியோங் (Lee Chee Leong) |
பாரிசான் | - | 16,137 | 27.17% | - 7.91 % ▼ | |
ஜெனிஸ் வோங் ஓய் பூன் (Janice Wong Oi Foon) |
பெரிக்காத்தான் | - | 12,127 | 20.42% | + 20.42% | |
லியோங் சியோக் லுங் (Leong Cheok Lung) |
வாரிசான் | - | 655 | 1.10% | + 1.10% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)