பாக்கித்தான் |
கம்போடியா |
கம்போடியா – பாக்கித்தான் உறவுகள் (Cambodia–Pakistan relations) என்பது பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு மற்றும் கம்போடிய இராச்சியம் இடையிலான வெளிநாட்டு உறவுகளைப் பற்றி விவரிக்கிறது. புனோம் பென்னில் பாக்கித்தானுக்கான தூதரகம் அமைந்துள்ளது. ஆனால் பாக்கித்தானில் கம்போடியாவிற்கான தூதரகம் ஏதும் அமைக்கப்படவில்லை.
இரண்டு நாடுகளுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் முதலாவது திட்டமொன்று ஏப்ரல் மாதம் 2004 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டது. தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் எல்லைப் பகுதி முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டும் பலதரப்பு உறவுகளை வளர்க்கவும் முன்னெடுக்கவும் பாக்கிஸ்தான் மற்றும் கம்போடியா முன்வந்துள்ளன.[1]
பாக்கித்தானிலுள்ள பல்வேறு சிவில் விமான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு படை நிறுவனங்களில் கம்போடிய மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான உறுதியை பாகித்தானிய அரசாங்கம் அளித்துள்ளது[1] .