கம்லா வர்மா (Kamla Verma) (1928 - ஜூன் 8 2021) அரியானா சட்டமன்றத்தில் யமுனா நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை (1977-1981, 1987-1991 மற்றும் 1996-2000) சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதியாவார். [1]
வர்மா குஜ்ரான்வாலாவில் (தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாபில் ) பிறந்தார். அவர் ஆயுர்வேதத்தைப் படித்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆரிய சமாஜுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பிரிவின் தலைவராகவும், முன்னதாக ஜனசங்கத்தின் தலைவராகவும் இருந்தார். "நெருக்கடி நிலையின்" போது வர்மா 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தேவி லால் தலைமையிலான அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார். [2]
கொரோனா தொடர்புடைய மியூகோமிகோசிசு காரணமாக வர்மா 20 ஜூன் 2021 அன்று ஹரியானாவின் ஜகத்ரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறந்தார். [3]