கயஸ் அகமது

கயஸ் அகமது (Qais Ahmad பஷ்தூ: قیص احمد  ; பிறப்பு 15 ஆகஸ்ட் 2000) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1]

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

இவர் செப்டம்பர் 21, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் காபூல் ஈகிள் துடுப்பாட்ட அணிக்காக இவர் இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[2]

1 மார்ச் 2018 அன்று 2018 அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்திய துடுப்பாட்ட அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர்அறிமுகமானார்.[3] அந்த்ப் போட்டியில் பத்து இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டித் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி 41 இலக்குகளைக் கைப்பறினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[4]

10 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்தியத்திற்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[5]

இருபது20

[தொகு]

2018 ஆம் ஆண்டின் கரீபியன் லீக் துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்கு இவர் தேர்வானார்.செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் பால்க் அணியில் இடம் பெற்றார்.[6] போட்டியின் இறுதிப் போட்டியில், இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார் மேலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் பால்க் லெஜண்ட்ஸ் நான்கு இலக்குகளால் வெற்றி பெற்றது.[7] ஒன்பது போட்டிகளில் 15 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரகள் வரிசையில் முதல் இடம் பெற்றார் [8]

2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவுப் பட்டியலில் இடம் பெற்றதினைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9] பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக் பாஷ் தொடரில் இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் துடுப்பாட்ட அணிக்காக இவர் விளையாடினார். தைமல் மில்ஸ் காயம் காரணமாக வெளியேறியதனால் இவர் மாற்று வீரராகத் தேர்வானார்.[10]

ஜூலை 2019 இல், யூரோ டி 20 ஸ்லாம் துடுப்பாட்ட போட்டியின் தொடக்க பதிப்பில் கிளாஸ்கோ ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[11][12] இருப்பினும் ஆகச்ட் மாதம் போட்டி ரத்து செய்யப்பட்டது.[13]

சர்வதேச வாழ்க்கை

[தொகு]

டிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[14] இந்தப் போட்டித் தொடரில் 14 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார். போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து சர்வதேச துடுப்பாட்ட கவுன்சில் (ஐ.சி.சி) அஹ்மத்தை அணியின் வளரும் நட்சத்திரமாக அறிவித்தது.[15] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[16]

குறிப்புகள்

[தொகு]
  1. "Qais Ahmad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  2. "Eliminator, Shpageeza Cricket League at Kabul, Sep 21 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  3. "1st Match, Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament at Amanullah, Mar 1-4 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
  4. "Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament, 2018, Speen Ghar Region: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
  5. "Group B, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Jul 10 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
  6. "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
  7. "Qais Ahmed, Chris Gayle star as Balkh Legends win inaugural APL". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  8. "Afghanistan Premier League, 2018/19 - Balkh Legends: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  9. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Hurricanes sign international spinner". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
  11. "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
  12. "Euro T20 Slam Player Draft completed". Cricket Europe. Archived from the original on 19 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "Inaugural Euro T20 Slam cancelled at two weeks' notice". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  14. "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  15. "U19CWC Report Card: Afghanistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
  16. "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.