கயாரா கின்ஹன்னா ராய் (Kayyara Kinhanna Rai) ( ஜூன் 8, 1915 – ஆகஸ்ட் 9, 2015) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், ஆசிரியர் மற்றும் விவசாயி ஆவார்.[1][2][3][4][5][6]
ராய், ஜூன் 8, 1915 அன்று துக்கப்பா மற்றும் தெயக்க ராய் ஆகியோருக்கு பிறந்தார். ராய் முதலில் கன்னடத்தை பள்ளியில் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் தனது கையால் எழுதப்பட்ட, முதல் பத்திரிகையான சுஷீலாவை தனது 12 வயதில் வெளியிட்டார். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இந்தியாவின் சுதந்திர இயக்கத்திலும் பங்கேற்றார். இந்த காலகட்டத்தில் இவர் யுனியக்கா என்பவரை மணந்தார். மேலும் இவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர்.
ராய், மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்ட இவர் தனது எழுத்துக்களை சுவாபிமானா, மெட்ராஸ் மெயில் மற்றும் தி இந்து போன்ற செய்தித்தாள்களுக்கு வழங்கினார். இவர் 1969 இல் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றார்.[7] இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் கவிஞர், நாடகம், இலக்கணம் மற்றும் குழந்தைகள் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஸ்ரீமுகம்ஐக்கியகானம், புனர்னவம்,சேதனம் மற்றும் கோரகம் போன்றவை அடங்கும். இவர், கன்னடக் கவிஞரான கோவிந்த பை யின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அவரது மற்ற முக்கியமான படைப்புகள் மலையாள சாகித்ய சாரித்ரே ( மலையாள இலக்கிய வரலாறு), இது பி.கே. பரமேஸ்வரன் நாயர் [8] மற்றும் சாகித்ய துருஷ்டி ஆகியோரின் அசல் படைப்பின் மொழிபெயர்ப்பாகும். இவருக்கு 2005 இல் மங்களூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[9]மங்களூரில் நடைபெற்ற 66 வது அகில கன்னட இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அவரது சில கவிதைகள், கன்னடத் திரைப்படத்தில், திரைப்பாடல்களாக பயன்படுத்தப்பட்டன. அத் திரைப்படத்தின் பெயர் பதுவாரளி பாண்டவரு ( கன்னடம்: ಪಡುವಾರಳ್ಳಿ ಪಾಂಡವರು) ஆகும். இதை புட்டண்ணா கனகல் இயக்கியுள்ளார். 1980 இல் கசர்கோட்டில் கேரள சட்டப்பேரவைக்கான தேர்தலுக்காகவும் இவர் நின்றார். ஆனால் வெற்றிபெறவில்லை.[10]
ராய் ஒரு தீவிர விவசாயியாகவும் இருந்தார், மேலும் பாக்கு, இரப்பர் மற்றும் நெல் சாகுபடியில் தீவிரமாக இருந்தார்.
காசர்கோடு மாவட்டத்தைகர்நாடகாவில் இணைப்பதற்கான பிரச்சாரகராக ராய் இருந்தார். அவரது முக்கிய இலக்குகளில் ஒன்று (சந்திரகிரி நதியின் வடக்குப்பகுதியில்) கர்நாடகத்துடன், காசர்கோடு மாவட்டத்தின் வடக்கு பகுதியை இணைப்பதாகும். இது மகாஜன் குழு அறிக்கையினை செயல்படுத்த எடுத்த முயற்சி ஆகும்.[11] இந்த இலக்கை அடைய 2002 ஆம் ஆண்டில் காசர்கோடு இணைப்பு நடவடிக்கை கவுன்சிலை (காசர்கோடு விலினீகரன கிரியா சமிதி) நிறுவினார். இந்த சபையின் குறிக்கோள்களை விவரிக்கும் ராய் , மாவட்டத்தில் உள்ள மொழியியல் சிறுபான்மையினர் மலையாளிகளுக்கோ அல்லது கேரள மாநிலத்துக்கோ எதிரானவர்கள் அல்ல எனவும், ஆனால் நீதி மகாஜன் ஆணைய அறிக்கையை அமல்படுத்தக் கோருகின்றனர் எனவும் விவாதித்தார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், சி. அச்சுதா மேனன் மற்றும் பட்டம் தானு பிள்ளை போன்றோர் இது குறித்து பேசியுள்ளனர்.[12]
ராய், கள்ளகலியாவிலுள்ள தனது இல்லத்தில், வயது மூப்பின் காரணமாக, தன் 100வது வயதில் இயற்கை மரணம் அடைந்தார். கள்ளகலியா எனப்படும் பகுதி, படியட்கா என்னுமிடத்தில் உள்ளது. இது, கேரளாவில்,காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
↑"Three stalwarts conferred with doctorates". Online Edition of the Deccan Herald, dated 25 January 2005. 2005, The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 13 September 2005. பார்க்கப்பட்ட நாள் 18 April 2007.
↑Decaan Herald News Service. "Political move on Mahajan Report sought". Online Edition of the Deccan Herald. 2005, The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 31 March 2006. பார்க்கப்பட்ட நாள் 19 April 2007.