கரவுனாக்கள் அல்லது நெகுதரி என்பவர்கள் ஒரு மங்கோலிய மக்கள் ஆவர். இவர்கள் துருக்கிஸ்தான் மற்றும் மங்கோலியாவில் இருந்து இடம்பெயர்ந்து ஆப்கானிஸ்தானில் குடியமர்ந்தனர்.[1][2]
நெகுதரி என்பவர்கள் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மங்கோலிய பூர்வீகத்தை கொண்ட ஒரு மக்கள் குழு ஆவர். கசாரா மக்களுக்கும் இவர்களுக்கு உள்ள வேறுபாடு யாதெனில் கசாரா மக்கள் பயன்படுத்தும் மொழியில் மங்கோலிய தாக்கம் இருப்பதில்லை. அதே நேரத்தில் நெகுதரி மக்கள் மங்கோலிய தாக்கம் கொண்ட மோகோல் மொழியைப் பேசினர். எனினும் அந்த மொழி இப்போது அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த பழங்குடியின பெயர் முன்னாள் ராணுவத் தலைவரான நெகுதரிடமிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. மார்கன் என்ற வரலாற்றாளரின் கூற்றுப்படி நெகுதர் என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் தளபதியாக இருந்தார்.[3] வியேர்ஸ் என்ற வரலாற்றாளரின் ஆராய்ச்சியின்படி அபகா கானுக்கு எதிராக கிளர்ச்சி செய்த தலைவர் அவர்தான் என மார்கன் குறிப்பிட தவறியுள்ளார் என்று கூறியுள்ளார்.[4]