துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2008 |
ஆட்சி எல்லை | கராச்சி பெருநகரப்பகுதி |
தலைமையகம் | கராச்சி, சிந்து, பாக்கித்தான் |
கீழ் அமைப்புகள் |
|
கராச்சியின் நகர்ப்புற போக்குவரத்து கழகம் (KUTC), கராச்சி பெருநகரப் பகுதியில் சாலை போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதற்கான ஒரு நகராட்சி நிறுவனம் ஆகும். கராச்சியின் தொடர்வண்டி, கராச்சியின் வெகுவிரைவு பேருந்து உட்பட மற்ற முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளது. அதே போல் நகரின் பல பொது போக்குவரத்து திட்டங்களுக்கும் ஆதரவளிக்கிறது.
க.ந.போ.க, 2008 மே 8 அன்று பாக்கித்தானின் பாதுகாப்பு மற்றும் பரிமாற்றம் ஆணைக்குழுவில் பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இதில் பாக்கித்தான் தொடர்வண்டி நிறுவனத்திற்கு 60%, சிந்து அரசுக்கு 25%, மற்றும் கராச்சி மாவட்ட அரசுக்கு 15% பங்கும் உள்ளது.[1][2]