கரிபி ஹடாவோ

கரிபி ஹடாவோ தேஷ் பச்சாவோ (Garibi Hatao Desh Bachao, "வறுமையை அகற்று, நாட்டைக் காப்பாற்று") என்பது இந்திரா காந்தியின் 1971 தேர்தல் பரப்புரையின் கருப்பொருளாகவும் முழக்கமாகவும் இருந்தது. இந்த முழக்கமும், அதனுடன் முன்மொழியப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும் இந்திரா காந்திக்கு கிராமப்புற, நகர்ப்புற ஏழைகளிடம் தேசிய அளவிலான ஆதரவை பெறத்தக்கதாக வடிவமைக்கப்பட்டது. இது மாநிலத்திலும் உள்ளூர் அளவிலும் ஆதிக்கம் செலுத்தும் சாதிகளையும் நகர்ப்புற வணிக வர்க்கத்தையும் கடந்து அடிமட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவைப் பெறத்தக்கதாக வடிவமைக்கபட்டது. மேலும், முன்பு குரலற்றவர்களாக இருந்த ஏழைகள் குறிப்பாக தலித்துகளும், பழங்குடிகளும் அவர்கள் பங்கிற்கு கடைசியில் அரசியல் மதிப்பு, அரசியல் பலம் ஆகிய இரண்டையும் பெறுவதாக இது இருந்தது. [1]

கரிபி ஹட்டாவோ மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள், உள்ளுர் அளவில் செயல்படுத்தப்பட்டாலும், ஒன்றிய அரசால் நிதியளிக்கப்பட்டு, புது தில்லியில் உள்ள அரசு அதிகாரிகளாலும், காங்கிரசு கட்சி ஊழியர்களாலும் மேம்படுத்தப்பட்டு, மேற்பார்வையிடப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.[சான்று தேவை] இது 5வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Garibi Hatao Programme by Indira Gandhi".