கரீபியன் ஆங்கிலம் (Caribbean English) என்பது கரீபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். கரீபியன் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா, கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரீபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலரகள் வகையான அந்த பகுதியில் பேசும் மொழியை ஒத்ததாகும். ஆனால் அவர்களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
இந்த கரீபியன் நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாறுபட்ட பேச்சு வழக்கில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட போக்கு காணப்பட்டாலும் இது முதன்மையாக பிரிட்டன் ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்ரிக்க மொழிகளை அடிப்படை ஆதாரமாக கொண்டது என்பதை கற்றறிந்த அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறாரார்கள்.
டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் கயானா ஆகிய இந்திய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கரீபியன் ஆங்கிலம், பிரித்தானிய ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க மொழிகளில் கூடுதலாக ஹிந்துஸ்தானி மற்றும் பிற தென்னாசிய மொழிகளால் தாக்கம் பெற்றவையாக இருக்கின்றன.[1][2][3]