கருணா நந்தி Karuna Nundy | |
---|---|
2018 ஆம் ஆண்டில் கருணா நந்தி | |
பிறப்பு | 4 சனவரி 1976[1] |
கருனா நந்தி (Karuna Nundy) இந்திய உச்சநீதிமன்றத்தில் ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார் . இவர் அரசியலமைப்பு சட்டம், வணிக வழக்கு மற்றும் நடுவர், ஊடக சட்டம் மற்றும் சட்டக் கொள்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார். [2] [3] [4] [5] [6]
நந்தி இந்தியாவின் போபாலில் பிறந்தார். இவர் போபாலில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவில் பள்ளியில் கல்வி பயின்றார். [7] நந்தி தனது திறமைகள் மூலம் தனது சமூகத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் வளர்ந்தார். இவரது இளமைப் பருவத்தில் , இவருடைய பெற்றோர்களும் அரசு மற்றும் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டனர். இவரது தந்தை ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் பணிபுரிந்தார், ஆனால் எய்ம்சில் பணியில் இருந்து விலகி இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் வேலை செய்தார். நண்டியின் உறவினர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட்ருந்ததனை அறிந்த இவரது தாயார், வட இந்தியாவின் விறைப்பு வாத சமூகத்தினைத் தொடங்கினார். [8]
தில்லி பல்கலைக்கழகத்தின் புனித இசுட்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். [9] ஒரு தொலைக்காட்சி பத்திரிகையாளராக சிறிது காலம் பணியாற்றிய பிறகு [9] இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார், [10] [9] பின்னர் நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து எல்எல்.எம். பயின்றார்.
இவர் ஐக்கிய நாடுகள் அவையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில், இசுபைசுஜெட் விமான நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் இவர் ஜீஜா கோசைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். திருமதி கோசு பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கொல்கத்தாவிலிருந்து கோவா செல்லும் விமானத்தில் ஏறினார். இவளுடைய உடல்நிலை மோசமடைவதை இவர்கள் விரும்பவில்லை என்று கூறி விமானத்தை தரையிறக்குமாறு விமான ஊழியர்களிடத்தில் இவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இவர் அவமானப்படுத்தப்பட்டார். இவர் விமான நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமான நிறுவனங்களை வலியுறுத்தினார். உச்ச நீதிமன்றம் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் விமான நிறுவனத்திற்கு ரூ .10 லட்சம் அபராதமாக வழங்கவும், அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு தேவைகள் மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டது. [11]
நந்தி தனது வாடிக்கையாளர்களுடனான தனது உறவை தனக்கு சமமாக விவரிக்கிறார். "என் வாடிக்கையாளர்கள் எப்போதும் என் வழக்குகளில் பங்காளிகள்." "மக்கள் வந்து தங்கள் பிரச்சனையை என்னிடம் கொடுக்கும் சூழ்நிலையில் வாருங்கள் இதனை சேர்ந்து சமாளிப்போம் என்று கூறுவேன்.நமது வாடிக்கையாளருக்கு நம்மை விட எப்போதும் வழக்கைப் பற்றி அதிகம் தெரியும். அவர்களுக்கு என்ன வேண்டும், எது வேண்டாம் என்று இவர்களுக்கும் தெரியும். [12]
இவருக்கு முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன: "பொருள், பணம் மற்றும் உருமாற்றம்." [13]
2012 தில்லி பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு பாலியல் வன்கொடுமை மசோதாவை உருவாக்குவதில் நந்தி ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். [14] 2019 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்ட கட்டமைப்புகளை உருவாக்க இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் ஒரு புதிய நிபுணர் குழுவிற்கு வழக்கறிஞரை நியமித்தது. [15] நேபாள இடைக்கால அரசியலமைப்பு, பாகிஸ்தான் ஆளவை, பூட்டான் அரசு, மற்றும் மாலத்தீவில் சட்ட சீர்திருத்தம், மாலத்தீவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடனான கொள்கை சிக்கல்களுக்கும் இவர் ஆலோசனை வழங்கியுள்ளார். [16] டேவிட் நியூர்பெர்கர் மற்றும் அமல் குளூனி தலைமையிலான ஊடக சுதந்திரத்தை ஆதரிப்பதற்காக நந்தி யுகே குழுவில் பங்கேற்கிறார். [17]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)