கரும்பூலா | |
---|---|
இலைகளும் பூக்களும் | |
கனி | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Phyllanthus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PhyllanthusP. reticulatus
|
இருசொற் பெயரீடு | |
Phyllanthus reticulatus Poir. | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
கரும்பூலா (Phyllanthus reticulatus [2] ) என்பது ஜீன் லூயிஸ் மேரி பாய்ரெட்டால் விவரிக்கப்பட்ட ஒரு தாவர இனமாகும். இது பைலாந்தேசியே குடும்பத்தை சேர்ந்தது.[3][4]
இது ஆசிய பேரினமான ஃபில்லாந்தசுக்கு உட்பட்ட ஒரு இனமாகும் (ஆனால் இது ஜமைக்காவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது); இது சிலசமயம் பி. பாலிஸ்பெர்மசுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளப்படுகிறது.[5] வியட்நாமிய மொழியில் இதன் பெயர் phèn đen (சில நேரங்களில் diệp hạ châu mạng ) ஆகும். இது வடக்கு ஆத்திரேலியாவிலும் காணப்படுகிறது.[6] அங்கு மொய்ல் ஆற்றுப் பகுதியின் பழங்குடியினர் இந்த மரத்தை தீக்கோலுக்கு பயன்படுத்துகின்றனர். மேலும் இதை மிர்ரினிமிர்ரினி என்று அழைக்கின்றனர்.
இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் தெராய் பகுதிகளிலும் குளக் கரையோரங்களில் ஏராளமாக காணப்படுகிறது. இது உள்ளூர் மொழியில் சிகட்டி / सिकटी/सिक्टी என்று அழைக்கப்படுகிறது.
கரும்பூலா கிழக்கு ஆசியாவில் உள்ள பல்வேறு வகையான எபிசெபாலா என்னும் ஒருவகை அந்துப்பூச்சியால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகிறது. வளர்ந்த அந்துப்பூச்சிகள் பூக்களில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன, ஆனால் பி. ரெட்டிகுலட்டஸ் பூக்களின் கருப்பையில் முட்டையிடுகின்றன. அங்கு வளரும் குடம்பிகள் வளரும் விதைகளில் சிலவற்றை உட்கொள்கின்றன.[7]
இதில் பின்வரும் கிளையினங்கள் கேட்டலாக் ஆப் லைப் என்னும் தரவு தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன:[3]
கரும்பூலா ஒரு புதர் தாவரமாகும். சில சமயங்களில் சற்று ஒழுங்கற்று வளரும் இது பொதுவாக 5 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும். இளந் தாவரமாக இருக்கும்போது மென்மையான தண்டுகளுடன் இளஞ்சிவப்பு அல்லது சாம்பல்-பழுப்பு நிறத்தில் தண்டுகள் இருக்கும். முழு விளக்கத்திற்கு சீனாவின் ஃப்ளோரா மற்றும் கீழே உள்ள படக்காட்சியகத்தைப் பார்க்கவும்.