கருவுறுதல் சிகிச்சையகம் (Fertility clinic) என்பது இயற்கையாகக் குழந்தை பேற்றிலா தம்பதிகளுக்கு உதவும் மருத்துவ சிகிச்சை நிலையம். கருத்தரிப்பு மற்றும் கர்ப்பம் இந்த சிகிச்சை நிலையங்களில் மக்கட்பேறின்மை குறைபாட்டினை கண்டறிய நோயறிதல் சோதனைகள் மற்றும் சில நேரங்களில் மிகவும் மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இத்தகைய கருவுறுதல் சிகிச்சையகங்களில் இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணர்கள், கருவியல் வல்லுநர்கள், சோனோகிராஃபர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பயிற்சி பெற்ற பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். குத்தூசி மருத்துவம், ஹிப்னோதெரபி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் நிபுணர்களின் சேவையும் ஒரு பகுதியாக உள்ளது.
கருவுறுதல் சிகிச்சையகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் சிக்கல்களைக் கண்டறியும் சோதனைகள் நடைபெறும். கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் ஆண்களிடம் 35%, பெண்களிடம் 35%, ஒருங்கிணைந்த சிக்கல்களில் 20% மற்றும் விவரிக்கப்படாத காரணங்கள் 10% ஆகும். ஆண்களைப் பொறுத்தவரை, விந்து சேகரிப்பு என்பது விந்து தரத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறியும் நிலையான சோதனையாகும். பெண்களைப் பொறுத்தவரை, அண்டவிடுப்பின் பகுப்பாய்வு, பலோபியன் குழாயில் அடைப்பு மற்றும் கருப்பை கோளாறுகள் ஊடுகதிர் மற்றும் லேபராஸ்கோபி முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.[1] கர்ப்ப பரிசோதனையில் மீயொலி பயன்பாடும் உள்ளடங்கியது.
இச்சிகிச்சையில் அண்டவிடுப்பின் தூண்டல், அறுவை சிகிச்சை தலையீடுகள், செயற்கை விந்தூட்டல், கருப்பையகக் கருவூட்டல் (IUI), வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (IVF), கருமுட்டை தானம் அல்லது விந்துக் கொடையினைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். கருவுறுதல் சிகிச்சையகத்தில் செய்யப்படும் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப நடைமுறைகளில் ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை நன்கு அறியப்பட்டதாகும். டெஸ்டிகுலர் எபிடிடிமல் விந்தணு சேகரித்தல் போன்ற மேம்பட்ட ஆண் கருவுறாமை சிகிச்சைகள் இந்த நாட்களில் கருவுறுதல் சிகிச்சையகங்களால் வழங்கப்படுகின்றன.
நோய் கட்டுப்பாட்டு மையங்களுக்குப் புள்ளிவிவரங்களைத் தொகுக்கும் அமைப்பான உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப சங்கத்திற்கு (SART) அறிக்கை தரவுகள் தெரிவிக்கப்பட வேண்டும்.[2] கருவுறுதல் சிகிச்சையகங்களின் செயல்பாடுகள் பெரும்பாலும் வெற்றி விகிதங்களான குழந்தைப்பேற்றின் அடிப்படையில் ஒப்பிடப்படுகின்றன. எவ்வாறாயினும், ஒவ்வொரு அறிக்கையின் கீழும் ஒரு எச்சரிக்கை உள்ளது. "சிகிச்சைக்கு வருபவர்களின் பண்புகள் நிரல்களிடையே வேறுபடுகின்றன; எனவே, சிகிச்சையகங்களை ஒப்பிடுவதற்கு இந்த தரவு பயன்படுத்தப்படக்கூடாது." கருவுறுதல் ஆலோசனையினை குறிப்பிட்ட ஒரு சிகிச்சை மையத்துடன் பெறுவதோடு இல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சை மைய ஆலோசனையின் கீழ் செயல்படுத்துவது நன்மை தரும்.
"தி ஃபேமிலி மேன்" உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் இது குறித்து வெளிவந்தன.