கருவுற்ற பெண்கள் கொலை (murder of pregnant women) என்பது குடும்ப வன்முறையினால் ஏற்படும் கொலையாகும். நெருங்கிய கூட்டாளி வன்முறை அல்லது குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெரும்பாலோர் பெண்களாவர். இவர்களுக்கு தங்களுக்கு நேரும் தீங்குடன் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு நேரும் தீங்கு அச்சத்தை விளைவிக்கின்றது. கருவுறலுடன் தொடர்புடைய மரணம் பொதுவாக கருவுறலுடனான கொலை என வகைப்படுத்தப்படுகின்றது.[1] அண்மைக்காலங்களில் கருவுறலுடன் தொடர்புள்ள மரணங்கள் வன்முறையால் நிகழ்ந்தவையா என்பது குறித்த குவியம் கூடியுள்ளது.[2] பெண் கருவுறும்போதே நெருங்கிய கூட்டாளியின் வன்முறை துவங்கி விடலாம்.[3] கருவுற்ற நேரத்து திட்டுதலும் இழித்தலும் கருக்கால கொலைகளுக்கு முதன்மைநிலையாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.[1]
கருவுற்றப் பெண்களின் கொலை கொலையின் வகைப்பாடாக அண்மையில் தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போதியளவிலான புள்ளிவிவரங்களோ இவற்றை சுவடுபற்றும் அமைப்புக்களோ இல்லை.[4] இக்கொலைக்கு கருத்தரிப்பு ஓர் காரணமா என்பதைத் தீர்மானிக்கவும் கடினமாக உள்ளது.
பல்வேறு ஆய்வுகளின்படிகருவுற்றப் பெண்களின் அல்லது பேறுகாலப் பெண்களின் மரணங்கள் வழமையான இயற்கைக் காரணங்களை விட ஆட்கொலை, தற்கொலை கூடுதலாக உள்ளன என்றும்[5] கருவுற்றப் பெண்களின் மரணத்தில் ஆட்கொலை முதன்மையாக உள்ளது என்றும்[6][7] அறியப்பட்டுள்ளது. 1993இலிருந்து 1998 வரையான கருவுறலுடன் தொடர்புடைய மரணங்களை டா. இசபெல் எரான் தலைமையில் ஆராய்ந்த மேரிலாந்து மருத்துவத் துறை கருவுற்ற பெண்களின் மரணத்தில் ஆட்கொலை முதன்மைக் காரணமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மொத்த மரணங்களில் கருவுற்ற பெண்களின் ஆட்கொலைகள் 20% ஆகவும், கருவுறாத அதே வயது பெண்களின் ஆட்கொலைகள் 6% ஆகவும் இருந்துள்ளது. கருவுற்றக் கால மரணங்களில் இதயநிறுத்தம் இரண்டாவது காரணமாக 19%ஆக உள்ளது.[8]
ஏபிசி செய்தி நிறுவனம் கருவுற்ற பெண்களுக்கு நிகழும் மரணங்களில் 20% ஆட்கொலையால் நடைபெறுவதாக கூறுகின்றது.[9] இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் நோய்பரவல் தடுப்பு மையங்களின் அமைப்பு (சிடிசி) "கருவுற்ற காலத்து கொலைகளின் வீதம் 100,000 உயிர்பிறப்புகளுக்கு 1.7 ஆகும்" என்கின்றது.[10] இருப்பினும், சிடிசியின் தரவு குறைத்து மதிப்பிடப்பட்டதாகும் என ஜியானி சாங்கும் உடன் பணியாளர்களும் அமெரிக்க பொதுச் சுகாதார இதழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளனர் . இவர்களது கூற்றுப்படி, 100,000 உயிர்பிறப்புகளில் 10.5 கருவுற்ற பெண்களின் கொலை வீதமாகும்.[11]
இந்தக் கொலைகள் எந்தவொரு இனத்திற்கோ இனக்குழுவிற்கோ குறிப்பாக இல்லை. விவரங்கள் கிடைத்தவரை, 67 விழுக்காடு பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். பல பெண்கள் வீடுகளில் — படுக்கையறைகளில், முன்னறைகளில், சமையலறைகளில் — பொதுவாக அவர்களுக்கு அறிமுகமான ஆண்களால் கொல்லப்பட்டுள்ளனர். கணவர்கள். ஆண்நண்பர்கள். காதலர்கள்.[4]
குழந்தைப் பிறப்பிற்கு முன்பான தாய் மரணங்களுக்கு இது முதன்மைக் காரணம் என்பதற்கு போதிய நம்பத்தக்க ஆதாரங்கள் இல்லை. 1999ஆம் ஆண்டில் ஆட்கொலை 20 முதல் 24 வயதுடைய பெண்களின் மரணங்களில் இரண்டாவது முக்கியக் காரணமாகவும் 25 முதல் 34 வயதுடைய பெண்களின் மரணங்களில் ஐந்தாவது காரணமாகவும் விளங்கியது. இரண்டு குழுக்களிலும் விபத்துக்கள் முதன்மை காரணமாக விளங்கியது.[12]
2003ஆம் ஆண்டில் கலிபோர்னியா மரணச் சான்றிதழுக்கான ஆவணங்களில் இறந்த பெண்களின் கருவுற்றநிலையை பதியும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.[4]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)