கரோ சிகரம் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,467 m (4,813 அடி) |
பட்டியல்கள் | List of Indian states and territories by highest point |
ஆள்கூறு | 30°44′37″N 77°04′37″E / 30.74361°N 77.07694°E[1][2] |
புவியியல் | |
அமைவிடம் | பஞ்சகுலா மாவட்டம், அரியானா, இந்தியா |
மூலத் தொடர் | சிவாலிக் மலைகள் இமயமலை |
ஏறுதல் | |
எளிய வழி | Hike / scramble |
கரோ சிகரம் (Karoh Peak) என்பது இந்தியாவின் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தின் மோர்னி மலைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பெரிய இமயமலை மலைத்தொடரின் சிவாலி மலைத்தொடர்களில் உள்ள 1,467 மீட்டர் (4,813 ) உயரமுள்ள மலைச் சிகரமாகும். இது அரியானா மாநிலத்தின் மிக உயரமான இடமாகும்.[3]
பிரித்தானிய ஆட்சியாளர்கள் தி இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்தியாவில் உயரத்தை 1499 மீட்டர் என்று தவறாகப் பதிவு செய்திருந்தனர். ஆனால் பின்னர் இந்திய நில அளவைத் துறையின் அளவீடுகள் உண்மையான உயரம் சுமார் 100 அடிக்கும் (30 மீட்டர்) குறைவாக இருப்பதைக் கண்டறிந்தன. மேலும் அதிகாரப்பூர்வ உயரம் திருத்தப்பட்டது.[3]