கரோலின் கர்லெசு | |
---|---|
பிறப்பு | இலிமா, ஓகியோ | நவம்பர் 24, 1934
இறப்பு | பெப்ரவரி 13, 1987 | (அகவை 52)
வாழிடம் | ஓகியோ, அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகம் (AAVSO) |
துணைவர் | டான் கர்லெசு |
கரோலின் கர்லெசு (Carolyn Hurless) (நவம்பர் 24, 1934 – பிப்ரவரி 13, 1987) ஓர் அமெரிக்க வானியலாளரும் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் தகைமை விருதை வென்றவரும் ஆவார். இவர் தன் வாழ்நாகளில்78,876 வானியல் நோக்கீடுகளைச் செய்துள்ளார்.[1]
வானியலாளராக மட்டுமல்லாமல், இவர் தண் கணவர் டான் கர்லெசுவுடன் சேர்ந்து முழு நேர இசையாசிரியராகவும் இருந்துள்ளார்.[1] After her death, Don never remarried and lived in their house until his death on June 15, 2015.
பிறையான் சுகிப் தான் 1981 இல் கண்டுபிடித்த சிறுகோளை இவரது நினைவாக 3434 கர்லெசு எனப் பெயரிட்டுள்ளார். அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகம் 2012 இல் அதனுடைய நான்கு முன்னோடித் திட்டங்களுக்கு கரோலின் கர்லெசு வானியல் தொடர்கல்விக்கான இணைய நிறுவனம் (CHOICE)[தொடர்பிழந்த இணைப்பு] எனப் பெயரிட்டு இவருக்குத் தனிமதிப்பு வழங்கியுள்ளது.ளைவை இணையக் கல்வி மையத்துக்கான முன்னோடி முயற்சியாகும். இது கர்லெசு அக்கழகத்துக்கு விட்டுசென்ற ஓர் இலக்கே ஆகும்.[1][2][3]
ஜேனட் மத்தேய்: கரோலின் ஜே. கர்லெசு, (1934 – 1987) அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் ஆர்வமிக்க தூதுவர். அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழக இதழ், தொகுதி 16, எண். 1, p. 35 - 36. [1]