கர்கடே பிராமணர்கள் (Karhaḍe Brahmins) கரடா பிராமணர்கள் அல்லது கராத் பிராமணர்கள் என்றும் உச்சரிக்கப்படும் இவர்கள் ஒரு இந்து பிராமண துணை சாதியாவார்கள். முக்கியமாக இவர்கள் இந்திய மாநிலமான மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். [1]
தேசஸ்த் மற்றும் கொங்கணஸ்த் பிராமணர்களுடன், கர்கடே பிராமணர்களும் மகாராடிடிர பிராமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
இவர்கள் அடிப்படையில் ஆசுவலாயன சூத்திரத்தைப் பின்பற்றும் இருக்கு வேதபிராமணர்களாவர். இ வர்கள் பின்பற்றும் வேதாந்தத்தின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் முதலாவது ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இரண்டாவதாக மத்வாச்சாரியரின் துவைத வேதாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஸ்மார்த்தர்கள் ஆவர். அவர்களில் சிறிய பிரிவினரே மத்வ பிராமணர்கள். தேசஸ்த் பிராமணர்களைப் போலவே, பாரம்பரியமாக இவர்களும் தங்களுக்குள் கலப்புத் திருமணங்களை அனுமதித்தனர். [2]
இவர்கள் மூன்று பிரிவுகளாக உள்ளனர் - கர்கடே ( தேசஸ்த்திலிருந்து ), பாத்யே [3] மற்றும் பட் பிரபு. பாத்யேக்கள் இன்றைய கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
பாரம்பரியமாக, இவர்கள் இந்து கோவிலிலும் பிற சமூகங்களுக்கும் மத சேவைகளை வழங்கிய பூசாரிகளின் சமூகமாகும்.
மகாராட்டிராவில் உள்ள பெரும்பாலான கர்கடே பிராமணர்களின் தாய்மொழி மராத்தியாகும் . [4]
இவர்கள் பொதுவாக சைவ உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். [5]