கர்ணசுவர்ணா | |
---|---|
இரக்தாமிர்திகா விகாரையின் எச்சங்கள், சுமார் பொ.ச.600. | |
இருப்பிடம் | மேற்கு வங்காளம், இந்தியா |
ஆயத்தொலைகள் | 24°01′49″N 88°11′27″E / 24.03028°N 88.19083°E |
வகை | குடியேற்றங்கள் |
வரலாறு | |
கட்டப்பட்டது | பொ.ச. 7ஆம் நூற்றாண்டு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1929–30, 1962 |
அகழாய்வாளர் | கே. என். தீக்சித், எஸ். ஆர். தாசு |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் |
கர்ணசுபர்ணா (Karnasubarna) அல்லது கர்ணசுவர்ணா (பொருள்: கர்ணனால் அழகாக நிர்மாணிக்கப்பட்டது) என்பது 7 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பண்டைய வங்காளத்தின் கௌடப் பேரரசின் முதல் மன்னனான சசாங்கன் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்தது. சசாங்கனின் மரணத்திற்குப் பிறகு, காமரூப மன்னனான பாஸ்கரவர்மனிடம் ஒரு குறுகிய காலம் இது இருந்திருக்கலாம். இது அவனது நிதான்பூர் செப்புத் தகடு மூலம் தெளிவாகிறது. ஜெயநாகனின் வாப்ப கோசாவத செப்புத் தகட்டின்படி 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இது ஜெயநாகனின் தலைநகராக இருந்தது. கர்ணசுவர்ணாவின் இடிபாடுகள் இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் தற்போதைய முர்சிதாபாத் மாவட்டத்தில் கன்சோனாவில் அமைந்துள்ளன. [1] [2] இது முர்சிதாபாத் மாவட்டத்தின் தலைமையகமான பெர்காம்பூருக்கு தென்மேற்கே 9.6 கிலோமீட்டர் (6.0 மைல்) தொலைவில் உள்ளது. [3]
பாண்டவர்களின் தாயான குந்திக்கு முதன்முதலில் பிறந்த மகனான கர்ணனுக்கு கௌரவ இளவரசன் துரியோதனன் வழங்கிய அங்க இராச்சியத்தின் தலைநகராக இது இருந்ததாக ஒரு புராணக்கதை இருக்கிறது.
கிழக்கு ரயில்வேயின் பர்கர்வா-அசிம்கஞ்ச்-கட்வா சுழற்சியில் கர்ணசுபர்ணா தொடருந்து நிலையம் (முன்பு சிரூட்டி என்று அழைக்கப்பட்டது) அமைந்துள்ளது. சில பயணிகள் தொடருந்துகளும், விரைவு தொடருந்துகளும் இந்நிலையத்தைக் கடந்து செல்கின்றன. இங்கிருந்து மாவட்டத் தலைமையகம் பகாரம்பூருக்கு பேருந்துச் சேவைகள் உள்ளன.
பிரபல சீனப் பயணி சுவான்சாங் தனது பயணக் குறிப்புகளில் கர்ணசுவர்ணாவுக்கு அருகிலுள்ள வச்சிரயான பௌத்தர்களின் கற்றல் மையமான உலோ-தோ-மோ-சி (இரக்தாமிரித்திகா) மகாவிகாரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.[4][5] இது இராசபரிதங்கம் என்ற இடத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இராசபரிதங்கத்தின் தொல்லியல் தளம் பாகீரதி ஆற்றங்கரையிலுள்ள கர்ணசுவர்ணா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.4 கி.மீ தூரத்தில் உள்ளது. தொல்லியலாளர் எஸ். ஆர். தாசு என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் 1962ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒரு குழு இந்த தளத்தை முதன்முதலில் தோண்டியது. [6]
{{cite web}}
: |first=
has generic name (help)