கர்பூரி தாக்கூர் | |
---|---|
![]() 2024இல் இந்திய அஞ்சல் துறை வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் தாக்கூ | |
பிகாரின் 11வது முதலமைச்சர் | |
பதவியில் 22 டிசம்ப்ர் 1970 – 2 ஜூன் 1971 | |
முன்னையவர் | தோரகா பிரசாத் ராய் |
பின்னவர் | போலா பாஸ்வன் சாத்திரி |
பதவியில் 24 ஜூன் 1977 – 21 ஏப்ரல் 1979 | |
முன்னையவர் | ஜெகந்நாத் மிஸ்ரா |
பின்னவர் | ராம் சுந்தர் தாசு |
பிகாரின் 2வது துணை முதல்வர் | |
பதவியில் 5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968 | |
முன்னையவர் | அனுக்ரா நாராயண் சின்கா |
பின்னவர் | சுசில் குமார் மோடி |
பிகார் மாநில கல்வி அமைச்சர் | |
பதவியில் 5 மார்ச் 1967 – 31 ஜனவரி 1968 | |
முன்னையவர் | சத்யேந்திர நாராயண் சின்கா |
பின்னவர் | சதீஷ் பிரசாத் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பித்தௌஞ்சியா, பீகார் மற்றும் ஒரிசா மாகாணம், பிரித்தானிய இந்தியா | 24 சனவரி 1924
இறப்பு | 17 பெப்ரவரி 1988 பட்னா, பீகார், இந்தியா | (அகவை 64)
அரசியல் கட்சி | சோசலிசக் கட்சி, பாரதிய கிரந்தி தளம், ஜனதா கட்சி, லோக்தளம் |
பணி | சுதந்திர ஆர்வலர், ஆசிரியர், அரசியல்வதி |
விருதுகள் | ![]() |
கர்பூரி தாக்கூர் (Karpoori Thakur) (சனவரி 24, 1924—பிப்ரவரி 17, 1988) பிகார் மாநிலத்து முன்னாள் முதல்வர் ஆவார். சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் அரசு அலுவல்கள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிச் செயல்பட்டவர். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2024இல் இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4]
கற்பூரி தாக்கூர், பிகார் மாநிலத்தில் சமசுதிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுரில் பிறந்தார்.[5][6][7] மாணவப் பருவத்திலேயே வெள்ளையனே வெளியேறு இயகத்தில் கலந்து கொண்டார்.[8][9] இந்திய விடுதலைப் இயக்கத்தில் கலந்து கொண்டதால் 26 மாதங்கள் சிறையில் இருந்தார். கல்விக்குப் பின் ஒரு சிற்றுர்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
1960 ஆம் ஆண்டில் அஞ்சல் தொலைவரித் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் முன்னின்று போராடியதால் சிறைக்குச் சென்றார். டெல்கோ குழுமத் தொழிலாளர் போராட்டத்தில் 28 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து கலந்து கொண்டார்.
1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.[10]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
Karpoori Thakur, a Gandhian leader from an extremely backward caste of a barber or nai community from Samastipur
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)