கறுவாத் தோட்டம்
කුරුඳු වත්ත | |
---|---|
நாடு | இலங்கை |
மாநிலம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
அஞ்சல் குறியீடு | 00700 [1] |
கறுவாத் தோட்டம் (Cinnamon Gardens, சிங்களம்:කුරුඳු වත්ත) இலங்கையின் கொழும்பில் அமைந்துள்ள ஓர் நகரப்பகுதியாகும். கொழும்பு நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முன்பிருந்த கறுவாத் தோட்டத்தை ஒட்டி இப்பகுதிக்கு பெயர் எழுந்தது. 1789ஆம் ஆண்டில் இப்பகுதியில் 289 ஏக்கர்கள் (1.17 km2) பரப்பளவில் கறுவா மரங்கள் இருந்தன. இன்று இலங்கைப் பிரதமரின் அலுவலகம், சுதந்திர சதுக்கம்[2][3], கொழும்பு நகர மண்டபம், தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு[4], பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்[5] மற்றும் கொழும்பு தேசிய அருங்காட்சியகம்[6] அமைந்துள்ளன. மேலும் பல வெளிநாட்டு தூதரகங்களும் உயர்ஸ்தானிகள் அலுவலகங்களும் அமைந்துள்ளன. நாட்டின் உயர்ந்த மனிதர்களின் இல்லங்களும் மரங்களணைந்த சாலைகளில் காணப்படுகின்றன. [7] [8][9] கொழும்பின் வானிலை ஆராய்ச்சி மையம் (வளிமண்டலவியல்த் திணைக்களம்) மற்றும் இலங்கை கோள்மண்டலமும் பரணிடப்பட்டது 2019-10-21 at the வந்தவழி இயந்திரம் இங்குள்ளது.[10]