கற்றது தமிழ் | |
---|---|
இயக்கம் | ராம் |
தயாரிப்பு | என். சிவப்பிரசாத் சல்மாரா முகமது செரீப் |
கதை | ராம் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜீவா அஞ்சலி கருணாஸ் அழகம் பெருமாள் |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கதிர் |
படத்தொகுப்பு | சிறீகர் பிரசாத் |
விநியோகம் | எம்ஆர் பிலிம் புரடக்சன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 6, 2007 |
ஓட்டம் | 147 நிமி |
மொழி | தமிழ் |
கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்களை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.