கற்றல் இடம் (Learning space) அல்லது கற்றல் அமைப்பு என்பது கற்றல் சூழலுக்கான இருப்புசார்ந்த அமைப்பைக் குறிக்கிறது. இது கற்பித்தல் மற்றும் கற்றல் நிகழும் இடமாகும். [1] இந்த வார்த்தை பொதுவாக வகுப்பறைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, [2] ஆனால் இது ஒரு உட்புற அல்லது வெளிப்புற ஆகிய இரண்டு இருப்பிடத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது, இது உண்மையான அல்லது மெய்நிகர் முறைகளில் இருக்கும் இடங்களையும் குறிக்கலாம். கற்றல் இடங்களானது பயன்பாடு, கட்டமைப்பு, இருப்பிடம் மற்றும் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் மிகவும் வேறுபட்டவை. கற்றல் இடத்தின் வடிவமைப்பு கற்றல் செயல்முறையை பாதிக்கும் என்பதால், கற்றல் செயல்முறையை மனதில் கொண்டு கற்றல் இடத்தை வடிவமைப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பள்ளி என்ற சொல் கிரேக்கச் சொல்லான σχολή என்பதிலிருந்து வந்தது.( scholē) இதற்கு முந்தைய காலங்கலில் " ஓய்வு " மேலும் "ஓய்வெடுக்கும் நேரம்" என்று பொருள்பட்டது, பின்னர் "விரிவுரைகள் வழங்கும் குழு" என அறியப்படுகிறது. [3][4] பள்ளிக்கான சப்பானிய வார்த்தையான gakuen என்பதற்கு "கற்றல் தோட்டம்" அல்லது "கற்றலுக்கான தோட்டம்" என்று பொருளாகும். [5] மழலையர் பள்ளி என்பது ஒரு செருமன் வார்த்தையாகும், அதன் நேரடிப் பொருள் "குழந்தைகளுக்கான தோட்டம்", இருப்பினும் இந்த வார்த்தை "குழந்தைகள் இயற்கையான வழியில் வளரக்கூடிய இடம்" என்ற உருவக அர்த்தத்தில் உருவாக்கப்பட்டது.
கற்றல் இடங்களை வழங்கும் நிறுவனங்களை பல வழிகளில் வகைப்படுத்தலாம், அவற்றுள் முதனமையானவை பின்வருமாறு: