கலாச்சார இறையியல் (Theology of culture) என்பது பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் ஆய்வு செய்யும் இறையியலின் ஒரு கிளை ஆகும். பண்பாட்டு இறையியல் என்றும் இப்பிரிவு அழைக்கப்படுகிறது. இது கலாச்சாரத்தின் தத்துவத்திற்கு நெருக்கமாக உள்ளது. ஆனால் இருத்தலியல் மற்றும் ஆன்மீகவாதத்தில் கலாச்சார இறையியல் அதிக கவனம் செலுத்துகிறது.
கலாச்சாரத்தின் இறையியல் பற்றி எழுதிய முதல் இறையியலாளர் பால் டில்லிச் என்பவராவார். புனிதம் மற்றும் மதச்சார்பின்மை இடையேயான வித்தியாசத்தை உருவாக்குவது பற்றி அவர் விவாதித்தார் [1]. இப்போதெல்லாம், கலாச்சார இறையியல் மதங்களுக்கிடையே நிலவும் கலாச்சார வேறுபாடுகளையும் கையாள்கிறது. [2] இதனால் மதங்களின் இறையியலுடன் பல அம்சங்களையும் இப்பிரிவு பகிர்ந்து கொள்கிறது.