கலாபாக்கான் (P191) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kalabakan (P191) Federal Constituency in Sabah | |
கலாபாக்கான் மக்களவைத் தொகுதி (P191 Kalabakan) | |
மாவட்டம் | கலாபாக்கான் மாவட்டம் தாவாவ் மாவட்டம் |
வட்டாரம் | தாவாவ் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 83,970 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தாவாவ் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கலாபாக்கான்; தாவாவ் |
பரப்பளவு | 4,551 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அண்டி முகமது சூரியாண்டி (Andi Muhammad Suryandy) |
மக்கள் தொகை | 188,656 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கலாபாக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kalabakan; ஆங்கிலம்: Kalabakan Federal Constituency; சீனம்: 加拉峇干国会议席) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; தாவாவ் மாவட்டம்; கலாபாக்கான் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P191) ஆகும்.[5]
கலாபாக்கான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கலாபாக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கலாபாக்கான் மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கலாபாக்கான் நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 235 கிலோமீட்டர்கள் (146 mi)) தொலைவில் அமைந்துள்ளது. கலாபாக்கான் மாவட்டத்தின் தெற்கில், இந்தோனேசியா மாநிலமான வடக்கு கலிமந்தானின் நுனுக்கான் துணை மாநிலம் எல்லையாக உள்ளது.
இந்த மாவட்டத்தின் தென்கிழக்கில், கோவி விரிகுடா சூழ்ந்துள்ளது. சுலாவெசி கடலின் ஒரு பகுதி; மற்றும் வாலஸ் விரிகுடா (Wallace Bay); ஆகியவை மேற்கு கடற்கரையில் இருந்து கலாபாக்கனைப் பிரிக்கின்றன.
கலாபாக்கான் என்ற இடத்தின் பெயர் தீடோங் மொழியில் இருந்து வந்தது. கலாபாக்கான் என்றால் "சாப்பிடலாம்" என பொருள்படும். இந்தப் பகுதியில் மூருட் மற்றும் திடோங் பழங்குடியின மக்கள் மிகுதியாய் வாழ்கின்றனர்.
கலாபாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கலாபாக்கான் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P191 | 2004-2008 | அப்துல் காபூர் சாலே (Abdul Ghapur Salleh) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | மாமுன் சுலைமான் (Ma'mun Sulaiman) |
வாரிசான் | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அண்டி முகமது சூரியாண்டி (Andi Muhammad Suryandy) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அண்டி முகமது சூரியாண்டி (Andi Muhammad Suryandy) | பாரிசான் நேசனல் (BN) | 23,855 | 47.68 | 6.23 | |
மாமுன் சுலைமான் (Ma'mun Sulaiman) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 14,755 | 29.49 | 20.60 ▼ | |
நுராயினி அப்துல் கபூர் (Noraini Abd Ghapur) | பாக்காத்தான் (PH) | 9,398 | 18.78 | 18.78 | |
நூர் ஐனி அப்துல் ரகுமான் (Nur Aini Abdul Rahman) | தாயக இயக்கம் (GTA) | 1,681 | 3.36 | 3.36 | |
முகமது தியாவுதீன் அசன் (Muhamad Dhiauddin Hassan) | சுயேச்சை (Independent) | 341 | 0.68 | 0.68 | |
மொத்தம் | 50,030 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 50,030 | 98.50 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 761 | 1.50 | |||
மொத்த வாக்குகள் | 50,791 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 83,970 | 59.58 | 13.30 ▼ | ||
Majority | 9,100 | 18.19 | 3.56 | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)