பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கலிபோர்னியம்(III) புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
28064-96-2 24297-29-8 | |
ChemSpider | 28548254 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 185562 |
| |
பண்புகள் | |
Br3Cf | |
வாய்ப்பாட்டு எடை | 490.71 g·mol−1 |
தோற்றம் | பச்சை நிற திண்மம் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு, mS16 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கலிபோர்னியம்(III) புரோமைடு (Californium(III) bromide) CfBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கலிபோர்னியம் ஆக்சைடு (Cf2O3, கலிபோர்னியம்(III) புளோரைடு (CfF3), கலிபோர்னியம்(III) குளோரைடு மற்றும் கலிபோர்னியம்(III) அயோடைடு (CfI3) உள்ளிட்ட பிற கலிபோர்னியம் ஆலைடுகளைப் போலவே கலிபோர்னியம் புரோமைடிலும் கலிபோர்னியம் அணுவும் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.
AlCl3 மற்றும் FeCl3 வகை கட்டமைப்புகள் இரண்டிலும் கலிபோர்னியம்(III) புரோமைடு படிகமாக்கப்படுகிறது. முதலாவது கட்டமைப்பில், கலிபோர்னியம் அயனி ஆறு ஒருங்கிணைப்புகளுடன் உள்ளது. பிணைப்பு நீளம் 279.5±0.9 பைக்கோ மீட்டர், 282.7±1.1 பைக்கோ மீட்டர், மற்றும் 282.8±0.8 பைக்கோ மீட்டர் பிணைப்பு நீளங்கள் கொண்ட மூன்று தனித்தனி Cf-Br பிணைப்புகள் காணப்படுகின்றன.[1]
கலிபோர்னியம்(III) புரோமைடு உயர் வெப்பநிலையில் கலிபோர்னியம்(II) புரோமைடாக சிதைவடைகிறது.[2]
பெர்கிலியம்-249 முதல் கலிபோர்னியம்-249 வரையிலான கதிரியக்கச் சிதைவில் ஆக்சிசனேற்ற எண் மற்றும் படிக அமைப்பு பாதுகாக்கப்படுகிறது. ஆறு-ஒருங்கிணைப்பு பெர்க்கிலியம்(III) புரோமைடு (AlCl3-வகை ஒற்றைச்சரிவு அமைப்பு) சிதைந்து ஆறு-ஒருங்கிணைப்பு கலிபோர்னியம்(III) புரோமைடை உருவாக்குகிறது. அதேசமயம் ஓர் எட்டு ஒருங்கிணைப்பு பெர்க்கிலியம்(III) புரோமைடு (PuBr3-வகை, செஞ்சாய்சதுர அமைப்பு) எட்டு-ஒருங்கிணைப்பு கலிபோர்னியம்(III) புரோமைடை உருவாக்குகிறது.[3]