கலிமுல்லா கான் Kalimullah Khan | |
---|---|
2008 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது பெறும் கலிமுல்லாகான் | |
பிறப்பு | மாலிகாபாத், இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | மாங்காய் மனிதன் |
கல்வி | 7th Standard |
பணி | தோட்டக்கலை நிபுணர் |
அறியப்படுவது | மாங்காய் ஒட்டுதல் |
விருதுகள் | பத்மசிறீ |
கலிமுல்லா கான் (Kaleem Ullah Khan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தோட்டக்கலை நிபுணர் ஆவார். பழம் வளர்ப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். மாம்பழங்கள் மற்றும் பிற பழங்களை இனப்பெருக்கம் செய்வதில் இவர் செய்த சாதனைகளுக்காக அறியப்படுகிறார்.[1] ஒட்டுதல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரே மரத்தில் 300 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மாம்பழங்களை இவர் வளர்த்ததாக அறியப்படுகிறது.[1] இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் லக்னோ அருகிலுள்ள மாலிகாபாத்து நகரத்தில் பிறந்த கான், 7 ஆம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறி, குடும்ப விவசாயத் தொழிலுக்குச் சென்றார்.[2] ஒட்டுதல் என்ற அயல்நாட்டு பரவலாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி, இவர் பல புதிய மாம்பழ வகைகளை உருவாக்கியுள்ளார். அவற்றில் சில பிரபலமானவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களான சச்சின் டெண்டுல்கர், ஐசுவர்யா ராய், அகிலேசு யாதவ், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித் சா போன்றவர்களின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளன.[3][4] அனார்கலி, இவர் உருவாக்கிய மாம்பழ வகைகளில் இரண்டு வெவ்வேறு தோல்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு அடுக்குகள் கொண்ட பழமாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையைக் கொண்டுள்ளன.[2] தோட்டக்கலைத் துறையில் இவரது பங்களிப்புகளுக்காக 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.