தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | கலீல் கிசித் அகமது |
பிறப்பு | 5 திசம்பர் 1997 தோங், இராசத்தான், இந்தியா |
மட்டையாட்ட நடை | வலதுகை மட்டையாளர் |
பந்துவீச்சு நடை | இடதுகை மித வேக பந்து வீச்சாளர் |
பங்கு | பந்து வீச்சாளர் |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
ஒநாப அறிமுகம் (தொப்பி 222) | 18 செப்டம்பர் 2018 எ. ஆங்காங் |
கடைசி ஒநாப | 25 செப்டம்பர் 2018 எ. ஆப்கானித்தான் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2016-தற்போது வ்ரை | ராசத்தான் மாநிலத் துடுப்பாட்ட அணி |
2017 | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 313) |
2018 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 13) |
மூலம்: ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ, 25 செப்டம்பர், 2018 |
கலீல் அகமது (Khaleel Ahmed (பிறப்பு: டிசம்பர் 5, 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.[1]
பெப்ரவரி 5,2017இல் மாநிலங்களுக்கு இடையேயான இருபது20 போட்டியில் இராசத்தான் மாநில அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார்.[2] இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.[3] 2017 -2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 6, 2017 இல் நடைபெற்ற போட்டியில் ராசத்தான் மாநில அணிக்காக விளையாடினார்.[4]
சனவரி, 2018 இல் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.[5]
பெப்ரவரி 5, 2018 இல் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பைக்கான (பட்டியல் அ துடுப்பாட்டம்) தொடரில் ராசத்தான் அணிக்காக விளையாடினார்.[6]
செப்டம்பர், 2018 இல் ஆசியக் கிண்ணம் 2018 தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. செப்டம்பர் 18, 2018 இல் ஹொங்கொங் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[7]