![]() | |
நிறுவப்பட்டது | 17 பெப்ரவரி 2011 |
---|---|
அமைவிடம் | 10 பேஃபிரண்ட் அவென்யூ, சிங்கப்பூர் |
இயக்குனர் | ஹோனர் ஹார்கர் |
வலைத்தளம் | www |
கலையறிவியல் அருங்காட்சியகம் ( ArtScience Museumis) என்பது சிங்கப்பூரின், மையத்தில் உள்ள நகர நடுவத்தில், மரீனா பே சாண்ட்சை ஒட்டி அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் அகும். இது 2011 அக்டோபர் 17 அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கால் திறந்து வைக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் கலை அறிவியல் அருங்காட்சியகமாகும்.[1]
இதில் நிரந்தரக் காட்சிக் கூடங்கள் உள்ளன, என்றாலும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களின் சார்பில் அவ்வப்போது தற்காலிக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இக்கட்டிடத்தின் அமைப்பானது தாமரை மலரைப் போன்று உள்ளது.[2] இதை வடிவமைத்தவர் இசுரேல் கட்டடக் கலைஞர் மோஷி ஷப்தி ஆவார்.
இக்கட்டிடம் தாமரைபோல் காட்சியளிப்பதாக தெரிந்தாலும் உண்மையில் அயல்நாட்டினரை வரவேற்கும் விதத்தில் விரிந்த கையை பிரதிபலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூரிய வெளிச்சம் கட்டிடத்தினுள் நுழையும் வகையில் விரல்கள் போல் உள்ள தூண்களின் மேற்பகுதியில் கண்ணாடிக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கலை அறிவியல் அருங்காட்சியகமானது மொத்தம் 50,000 சதுர அடிபரப்பில் (6,000 சதுர மீட்டர்) 21 காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் வாயில் அருகே செயற்கை அல்லிக் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்துக்குத் தேவைப்படும் நீர், கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி வழியாக பெறப்படுகிறது. பின்னர் இந்த நீரானது அருங்காட்சியகத்தின் கழிவறைகளுக்கு மறு சுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்த கலை அறிவியல் அருங்காட்சியகமானது மூன்று நிரந்தர காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ளது அவை - Curiosity, Inspiration, Expression என்ற பெயரில் உள்ளன.
கலை அறிவில் அருங்காட்சியகத்தில் உலகின் புகழ்பெற்ற பிற அருங்காட்சியகங்களின் சேகரிப்புகள் அவ்வப்போது கண்காட்சியாக வைக்கப்பட்டுகின்றன.
50,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட அருங்காட்சியகத்தில் மொத்தம் 21 காட்சிக் கூடங்கள் உள்ளன. இதில் கலை / அறிவியல், ஊடகம் / தொழில்நுட்பம், வடிவமைப்பு / கட்டிடக்கலை போன்றவை இணைந்தவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடத்தில் லியொனார்டோ டா வின்சி, சால்வேட்டர் டால், ஆண்டி வார்ஹோல், வின்சென்ட் வான் கோக் ஆகியோரின் புகழ்பெற்ற ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அறிவியலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இயற்பியல் செயல்விளக்கக் கூடம், புதைபடிவவியல் கூடம், கடல் உயிரினங்களுக்கான கூடம், அண்டம், விண்வெளி ஆய்வு ஆகியவை பற்றி அறிந்துகொள்வதற்கான கூடங்களும் உள்ளன.
டில்மன் வால்டர்ஃபாங் மற்றும் அவருடைய குழுவினரால் 1998 ஆம் ஆண்டு காஸ்பர் நீரிணையில் தாங் அரசமரபு கால கலைப் படைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கி.பி. 830 காலப் பொருட்களும் அடங்கும். அவை அடுத்த ஆறு ஆண்டுகள், நியூசிலாந்தில் உள்ள சீபேட் எக்ஸ்போரேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அவை இறுதியில் சுமார் 32 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டன.[3][4]
அரபு டவுன் கப்பலில் துள்ளியமான மறு ஆக்கமான ஜுவல் ஆப் மஸ்கட் என்ற கப்பலானது அண்மையில் ஓமன் சுல்தானகத்தால் சிங்கப்பூர் நாட்டுக்கும், மக்களுக்கும் அன்பளிப்பாக வழிங்கியது.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)