கல் சிற்பம்

11ஆம் நூற்றாண்டின் பாறைச் சிற்பங்கள் உனகோடி, திரிபுரா
மலைக் குன்றில் செதுக்கப்பட்ட கௌதம புத்தர் சிற்பம்

கல் சிற்பம் என்பது கல்லால் செய்யப்பட்ட ஒரு பொருள் ஆகும். இதனைப் பொதுவாக செதுக்குவதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது அல்லது பார்வைக்கு முப்பரிமாண வடிவத்தை உருவாக்குகிறது. இதனை பலவகையான கற்களைக் கொண்டு செதுக்கி சிற்பமாக வடிக்கப்படுகிறது. நீடித்த பயன்பாட்டைக் கொண்ட கல் சிற்பங்கள் கட்டிடங்களின் வெளிப்புற மற்றும் உட்புறச் சிற்பங்களில் மிகவும் முக்கியமானது.

கல் செதுக்குதல் பல நுட்பங்களை உள்ளடக்கியது. கரடுமுரடான இயற்கை கற்பாறைகளை செதுக்குவதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது. பண்டைய எகிப்து, பண்டைக் கிரேக்கம், பண்டைய உரோமை, பண்டைய இந்தியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கு போன்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் செதுக்குவதற்கு நல்ல கற்கள் ஏராளமாக இல்லாவிட்டாலும், மூலப்பொருளின் நிரந்தரத்தன்மையின் காரணமாக, ஆரம்பகால சமூகங்கள் கூட சில வகையான கல் வேலைகளில் ஈடுபட்டது.

பாறை வேலைப்பாடுகள் என்றும் அழைக்கப்படும் (Petroglyph) கல் சிற்பத்தின் ஆரம்ப வடிவமாக இருக்கலாம். பாறையின் மேற்பரப்பின் ஒரு பகுதியை அகற்றி, கீறல், குத்துதல், செதுக்குதல் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்ட வர்ணம் பூசப்பட்ட பாறைச் சிற்பங்கள் மேம்பட்டவையாகும்.

காரைப்பூச்சு இன்றி கற்களால் கட்டப்பட்ட் சுற்றுச்சுவர்
மணற்கல்லால் செதுக்கப்பட்ட சிற்பம், பண்டைய எகிப்து

கல்லை சிற்பமாக செதுக்குவது என்பது நாகரிகத்தை விட பழமையான ஒரு செயலாகும். இது முதன்முதலில் குகைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களுடன் துவங்கியது.[1]வரலாற்றுக்கு முந்தைய சிற்பங்கள் பொதுவாக மனித வடிவங்களாக இருந்தன. பிற்கால பண்பாடுகளில் விலங்கு, மனித-விலங்கு மற்றும் சுருக்க வடிவங்களை கல்லில் வடிவமைத்தனர். தற்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தில் சுத்தியல்கள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மனித வரலாற்றின் பெரும்பகுதிக்கு, சிற்பிகள் கல் செதுக்குவதற்கான அடிப்படைக் கருவியாக ஒரு சுத்தியலையும் உளியையும் பயன்படுத்தினர்.

செதுக்கப்பட்ட சிற்பங்களில் பயன்படுத்தப்படும் கல் வகைகள்

[தொகு]

சோப்புக்கல் சிறிது கடினத்தன்மை கொண்டதால் எளிதில் சிற்பங்களை வடிக்க இயலும். சிற்பக் கலை மாணவர்கள் சோப்புக்கல்லை பயன்படுத்துவர். ஒளி ஊடுவுரும், மென்மையான வெண்சலவைக் கற்களை (Alabaster) பாம்புச் சிற்பங்கள் செய்வதற்கு எளிதானது. சுண்ணாம்புக் கல் மற்றும் மணற்கற்கள் வெண்சலவைக் கற்களைவிட இரண்டு மடங்கு கடினமானதும், செதுக்குவதற்கும் சிறந்தது ஆகும்.

பளிங்குக் கற்கள் வெண் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் ஓனிக்ஸ் கற்களில்[2] பண்டைய கிரேக்க கால சிற்பிகளுக்கு பளிங்குக் கற்களே விரும்பத்தக்க கல்லாக இருந்துள்ளது. இது வெள்ளை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்து சாம்பல் மற்றும் கருப்பு வரை பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

அடிக்கடி செதுக்கப்பட்ட கடினமான கல் கருங்கல் ஆகும். இக்கல் சிற்பக் கற்களில் மிகவும் நீடித்தது மற்றும் வேலை செய்வதற்கு மிகவும் கடினமானது. எரிமலைப்பாறை எனும் பசால்ட் கற்கள் கருங்கல்லை விட கடிமானது என்பதால் சிற்ப வேலைபாடுகளில் குறைவாகவே பயன்படுகிறது. பசால்ட் கல்லை பளபளப்பான தேய்க்கும் போது அழகான கருப்புத் தோற்றத்தை பெறுகிறது.

கல் சிற்பத்தின் செயல்முறை

[தொகு]
கல் சிற்பத்தை செதுக்க உதவும் கருவிகள்
கரடுமுரடான வேலைப்பாடுகள்
கல் செதுக்கலில் சரியான நகல்களை உருவாக்கும் பாரம்பரிய முறையான செயல்முறையை காட்டும் படம்

.

கல் செதுக்கலின் நேரடி முறையில், பொதுவாக செதுக்குவதற்கான கல்லைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடங்குகிறது, அதன் குணங்கள் வடிவமைப்பு செயல்பாட்டில் கலைஞரின் விருப்பங்களை பாதிக்கும். நேரடி முறையைப் பயன்படுத்தும் சிற்பிகள் முதலில் கல்லின் மீது ஓவியங்களைப் பயன்படுத்தலாம்.

சமகால தொழில் நுட்பங்கள்

[தொகு]
சூப்பர் கணினி மற்றும் ரோபோக்கள் உதவியுடன் செதுக்கப்படும் கல் சிற்பம்

21ஆம் நூற்றாண்டில் கல் சிற்பத்தை செதுக்குதலில், முப்பரிமான நவீன தொழில்நுட்பத்தில் குறிப்பாக ரோபோக்கள் கையாளப்படுகிறது.[3]

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Liebson, Milt (1991). Direct Stone Carving. Schiffer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88740-305-0. Page 9.
  2. Liebson, page 20.
  3. "Cloud Sourcing". Caltech Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 5 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.