கல்கி புராணம் (Kalki Purana(சமக்கிருதம்: कल्किपुराण), வைணவ இந்து நூல்களில் ஒன்றாகும். வங்காளத்தில் 15 மற்றும் 17ஆம் நூற்றான்டில் சமஸ்கிருத மொழி கையெழுத்து ஏட்டில் எழுதப்பட்ட இப்புராணம் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியின் பெருமையக் கூறுகிறது.[1] இப்புராணத்தின் சமஸ்கிருத கையெழுத்து ஏடுகள், தற்கால வஙகாளதேசத்தின் தலைநகரமான டாக்காவில் கண்டெடுக்கப்பட்டது.[1][2]
கல்கி புராணம், மகாபுராணங்களான பதிணென் புராணங்களில் கீழ் வருவதில்லை. கல்கி புராணத்தை உபபுராணம் அல்லது இரண்டாம் புராணமாக கணக்கிடப்படுகிறது. தற்போதுள்ள இதன் உரை பல பதிப்புகளில் உள்ளது. அதன் கட்டமைப்பு மற்றும் விவரங்களில் வேறுபடுகின்றன. சிலர் உரையை பகுதிகளாகப் பிரிக்கவில்லை மற்றும் சுமார் 35 அத்தியாயங்களாகப் பிரித்துள்ளனர்.. ஒரு கையெழுத்துப் பிரதியானது முறையே 7 மற்றும் 21 அத்தியாயங்களைக் கொண்ட மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.[3]
கல்கி புராணத்தின் துவக்கத்தில். பிரம்மாவால் படைக்கப்பட்ட கலி புருசனின் பரம்பரையை விளக்குகிறது. துவாபர யுகம் முடிவில் மற்றும் கலி யுகத்தின் தொடக்கத்தில் கலி மற்றும் அவரது அரக்க குடும்பத்தினர், மனித வடிவலில், பூவுகில் தோன்றி முனிவர்களுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துன்பங்கள் செய்வார்கள்.கலியுகத்தின் போது நால்வகை வர்ணங்கள் மற்றும் ஆசிரம தர்மங்கள் சிதைந்து, வேள்விகள் செய்வதை விடுத்து தெய்வ வழிபாடு மனிதனால் கைவிடப்படும்.[4]. கலி யுகத்தின் போது, கலி அரக்கன் மற்றும் கலியின் குடும்பத்தினரை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] எடுத்து வெள்ளைக் குதிரை மீதர்ந்து, கையில் வாளேந்தி பூவுலகில் தோன்றுவார். கல்கி பகவான் கலி மற்றும் அவனைச் சார்ந்தவர்களைக் கொன்று கற்றவர்களையும், மக்களையும் காப்பார்.
கலி யுகத்தின் பூவலகில் மனிதர்கள் படும் கொடுமைகளைக் கண்டு தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா தேவர்களுடன், விஷ்ணுவை சந்தித்து, கல்கி அவதாரம் எடுத்து, பூவுலகின் கலி புருசனால்[5], மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை விலக்க கோரினார். பகவான் விஷ்ணுவும், தான் பூவலகில் விஷ்ணுயாசஸ்-சுமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து கல்கி அவதாரம் எடுத்து, கலி யுகத்தின் முடிவில் கலி புருஷனை கொன்று, மக்களின் துயர் தீர்ப்பதாக வாக்களித்தார்.[6]
இளம் வயதிலேயே, கல்கிக்கு தர்மம், கர்மா, அர்த்தம் மற்றும் ஞானம் கற்பிக்கப்படுகிறது. புனித நூல்கள் கற்பிக்கப்படுகிறது. பரசுராமரின் (விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்) பராமரிப்பில் இராணுவப் பயிற்சியை மேற்கொள்கிறார்..[7] [8] கல்கி சிவனை வழிபடுகிறார், அவர் பக்தியால் மகிழ்ந்து சிவபெருமான் கல்கிக்கு தேவதத்தா எனும் தெய்வீக வெள்ளை குதிரையை வழங்குகிறார். ஒரு சக்திவாய்ந்த வாள், அணிகலன்கள் மற்ற தேவர்கள், தேவர்கள், துறவிகள் மற்றும் நீதியுள்ள அரசர்களால் வழங்கப்படுகின்றன. கல்கி பின்னர் இளவரசி பத்மாவதியை (இலக்குமியின் அவதாரம்) மணந்து மன்னன் விருகத்ரதன் மற்றும் சிம்ஹாலாவின் இளவரசி கௌமுதி (சிங்கத்தின் தீவு) மற்றும் ராஜா சசித்வஜா மற்றும் ராணி சுஷாந்தா ஆகியோரின் மகளான இளவரசி ரமாவை மணக்கிறார்.[9]
கல்கி பல போர்களில் சண்டையிடுகிறார், அவதாரத்தின் தளபதிகளால் அழிக்கப்பட்ட கலி புருஷன் மற்றும் அவரது முழு குடும்பத்தினரை அழித்து கலி புருஷனின் கொட்டத்தை அடக்கி, தீமையை முடிவுக்கு கொண்டு வருகையில், இதற்கிடையில், இரட்டை அசுரர்களான கோகா மற்றும் விகோகா ஆகிய அசுரரின் மிகவும் சக்திவாய்ந்த தளபதிகளை ஒரே நேரத்தில் போரிட்டு கொன்றார். கல்கி பின்னர் சம்பாலாவுக்கு ஆட்சி செய்யத் திரும்புகிறார், நல்லவர்களுக்காக ஒரு புதிய யுகத்தைத் துவக்கி, பூமியை தனது தளபதிகளிடையே பிரிக்கிறார். சுமதி மற்றும் விஷ்ணுயாஷா, அவரது பெற்றோர், அவர்கள் வசிக்கும் பத்ரிகாஷ்ரமத்தின் புனித இடத்திற்குச் செல்வார்கள். கல்கி தனது தர்மம் (கடமை) முடிந்ததால் பூமியை விட்டு வைகுண்டத்திற்குச் செல்கிறார்.[9]