கல்பனா தேவி

கல்பனா தேவி தெளடம்
Kalpana Thoudam
தனிநபர் தகவல்
முழு பெயர்கல்பனா தேவி தெளடம்
பிறப்பு1989 திசம்பர் 24
கிழக்கு இம்பால் மாவட்டம், மணிப்பூர், இந்தியா
பதக்கத் தகவல்கள்
25 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

கல்பனா தேவி தெளடம் (Kalpana Devi Thoudam) (பிறப்பு: டிசம்பர் 24, 1989) ஒரு இந்திய ஜூடோ வீராங்கனை ஆவார். மணிப்பூர் மாநிலத்திலுள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தில் இவர் பிறந்தார். இசுக்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 52 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]

தொழில்

[தொகு]

ஜூடோ விளையாட்டு வீரராக தனது வாழ்க்கையில், 1998 ஆம் ஆண்டில் குவஹாத்தியில் நடந்த துணை ஜூனியர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தெளடம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். பின்னர் தேசிய அளவிலான இளையர் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களையும், ஜூனியர் ஆசிய ஜூடோ போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றார். 2007 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய 20 வயதுக்குட்பட்டோர் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2010 ஆம் ஆண்டில், தாஷ்கண்டில் நடந்த சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றார். அதே ஆண்டில், சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் ஜூடோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.[2] 2013 ஆம் ஆண்டில், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த ஐ.ஜே.எஃப் கிராண்ட் பிரிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்று முதல் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் உஸ்பெகிஸ்தானின் ஜரிஃபா சுல்தனோவாவை தோற்கடித்தார். ஆனால், இஸ்ரேலிய கில்லி கோஹனிடம் தோற்றார். இரண்டாவது வாய்ப்பு சுற்றில் அவர் பிரேசிலின் ராகல் சில்வாவை தோற்கடித்தார். கூடுதலாக, அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையின் தலைமைக் காவலராக பணியாற்றியுள்ளார்.[3]

2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், 52 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே சென்னை மற்றும் ஜம்முவில் நடைபெற்ற இந்தியப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Women's –52 kg Bronze medal contest". glasgow2014.com. 24 July 2014. Archived from the original on 30 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Kalpana Devi Thoudam, Judoka, JudoInside". www.judoinside.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  3. "Kalpana Devi wins historic bronze in Judo WC". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.